பரிசில் கடாநிலை

பரிசில் கடாநிலை என்பது பரிசில் தரும்படி வேண்டிக்கொண்டு வாயிலில் நிற்பதைக் குறிக்கும். புறநானூற்றைத் தொகுத்துத் துறை குறிப்பிட்டவர் 17 பாடல்கள் இத்துறையைச் சேர்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • கடாநிலை என்பது கடைநிலை என்பதன் திரிபு. கடை என்பது அரண்மனை வாயில். கடாவும் (=வேண்டும்) நிலை அன்று.

பரிசில் வேண்டுவோர் வாயிலில் நின்றுகொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. [1]

புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்று குறிப்பிடுகிறது. [2]

புறநானூறு

தொகு
பாடல் எண் பாடிய புலவர் பாடப்பட்ட வள்ளல்
11 பேய்மகள் இளவெயினி சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
101 ஔவையார் அதியமான்
136 ஆய் துறையூர் ஓடைகிழார்
139 மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவன்
158, 159, 160 பெருஞ்சித்திரனார் குமணன்
164 பெருந்தலைச்சாத்தனார் குமணன்
169 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றன்
196 ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
198 வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
199 பெரும்பதுமனார் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
209 பெருந்தலைச்சாத்தனார் மூவன்
210, 211 பெருங்குன்றூர் கிழார் சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை
266 பெருங்குன்றூர் கிழார் சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

அடிக்குறிப்பு

தொகு
  1. சேய் வரல் வருத்தம் வீட வாயில்
    காவலர்க்கு உரைத்த கடைநிலையானும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 29)
  2. புரவலன் மகிழ் தூங்க
    இரவலன் கடைக் கூடின்று. (புறப்பொருள் வெண்பாமாலை 213)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசில்_கடாநிலை&oldid=1262393" இலிருந்து மீள்விக்கப்பட்டது