பரிப்பு மகாதேவர் கோயில்

பரிப்பு மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் அய்மனம் ஊராட்சியில் பரிப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . தெக்கும்கூர் ராஜாவுடன் தொடர்புடைய புகழ்பெற்ற சிவாலய தோத்திரத்தில் இக்கோயில் நல்பரப்பில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [1] [2] திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் இக்கோயில் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. கோயிலின் தாந்த்ரீக உரிமை பத்ரகாளி மட்டப்பள்ளி நம்பூதிரியிடம் உள்ளது. [3] [4]

பரிப்பு மகாதேவர் கோயில்

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவரான சிவபெருமான் கிழக்கு நோக்கி உள்ளார். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 'சிவாலயங்களில்' இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் கிருஷ்ணர், சாஸ்தா, கணபதி, பகவதி ஆகிய துணைத் தெய்வங்கள் உள்ளன. [5] தாரா, பின்விளக்கு, புஷ்பாஞ்சலி, பாயசம், கூவலமாலை ஆகியவை இங்கு படைக்கப்படுகின்றன.

புராணம்

தொகு
 
கோயிலின் கோபுரம்

தற்போதுள்ள கோயில் கட்டுமானம் கி.பி.825இல் எடப்பள்ளி ராஜா எனப்படுகின்ற 'மடத்தில் ராஜா' என்பவரால் கட்டப்பட்டதாகும். அவர் பரிப்புக்கு அருகில் உள்ள மடத்தில் அரண்மனையைச் சேர்ந்தவர் ஆவார். உள்ளூர் தலைவருக்கும் இவருக்கும் இடையில் நல்லுறவு பேணப்படவில்லை. இருப்பினும் இருவரும் சிவன் மீது பக்தி கொண்டிருந்தனர். தவறாமல் கோயிலுக்குச் சென்று வந்த இருவரும் மகாதேவா கோயிலில் ஒருவரையொருவர் சந்திக்க விரும்பவில்லை. இதற்கான ஒரு தீர்வாக, கோயிலில் பாரம்பரிய முகப்பு எனப்படுகின்ற இரண்டு 'பலிக்கல்புரங்கள்' கட்டப்பட்டன, கேரளாவில் உள்ள பிற கோயில்களில் ஒரே ஒரு பலிக்கல்புரமே உள்ளது. [6]

கடந்த காலத்தில், பரிப்பில் கிட்டத்தட்ட 141 நாயர் குடும்பங்கத்தார் குடியேறினர். 'ஏழமதுகளி' மற்றும் 'கவனையேறு' போன்ற பண்டைய கலை வடிவங்கள் அங்கு பெரும் முன்னேற்றத்தைப் பெற்றன. நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பரிப்பு, ராஜாவின் இராணுவப் பிரிவு மற்றும் வர்த்தக உறவுகளின் காரணமாக மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றது. [1]

விழாக்கள்

தொகு

இங்கு வருடாந்திர திருவிழா (திருவுத்ஸவம்) மலையாள மாதமான 'மீனம்' (மார்ச்/ஏப்ரல்) இல் நடத்தப்படுகிறது. மஹா சிவராத்திரியும் திருவாதிரையும் குறிப்பிடத்தக்க பிற பண்டிகைகளாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Prof. N.E. Kesavan Namboothiri (June 2014). Thekkumkur Charithravum Puravrithavum. Kottayam, Kerala state, India: Sahitya Pravarthaka Co-operative Society Ltd. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789385725647. Archived from the original on 2002-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.Prof. N.E. Kesavan Namboothiri (June 2014). Thekkumkur Charithravum Puravrithavum பரணிடப்பட்டது 2002-06-03 at the வந்தவழி இயந்திரம். Kottayam, Kerala state, India: Sahitya Pravarthaka Co-operative Society Ltd. p. 109. ISBN 9789385725647.
  2. "108 Shivalayas" by Kunjikuttan Ilayathu
  3. "✍pedia - Parippu Mahadeva Temple (പരിപ്പ് മഹാദേവ കോവെല്‌) Aymanam, Kottayam". http://pedia.desibantu.com/parippu-mahadeva-temple/. 
  4. "Things to Do - Parippu Sree Mahadeva Temple, Kumarakom, Kerala". பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
  5. "Parippu Mahadeva Temple, Aymanam, Kottayam". பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
  6. "Parippu Mahadeva Temple". Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிப்பு_மகாதேவர்_கோயில்&oldid=4108995" இலிருந்து மீள்விக்கப்பட்டது