பரிமல் சுக்லபைதியா

இந்திய அரசியல்வாதி

பரிமல் சுக்லபைதியா (Parimal Suklabaidya; பிறப்பு 20 சனவரி 1958) என்பவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த அசாம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2016ஆம் ஆண்டில் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தில் இவர் அமைச்சரானார். இவர் தொலாய் தொகுதியிலிருந்து நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] சுக்லபைதியா 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் அசாமின் சில்சர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.

பரிமல் சுக்லபைதியா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
தொகுதிசில்சர் மக்களவைத் தொகுதி (பஇ)
அமைச்சர், அசாம் அரசு
பதவியில்
24 மே 2016 – 6 சூன் 2024
முதல்மைச்சர்சர்பானந்த சோனாவால்
ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
அமைச்சர்
  • மீன்வளம், ஆயத்தீர்வை(2016 முதல்)
  • பொதுப்பணி (2016 – 2018)
  • சுற்றுச்சூழல் & வனம் (2018 – 2022)
  • போக்குவரத்து (since 2022)
முன்னையவர்பசந்தாதாசு (மீன்வளம்)
அஜித் சிங்(ஆயத்தீர்வை)
அஜந்தா நீயோக் (பொதுப்பணி)
பிரமிளா ராணி பிரம்மா (சுற்றுச்சூழல்)
சந்திர மோகன் பட்டோரி (போக்குவரத்து)
உறுப்பினர், அசாம் சட்டப் பேரவை
பதவியில்
19 மே 2016 – 6 சூன் 2024
முன்னையவர்கிரிந்திர மல்லிக்கு
தொகுதிதொலாய் சட்டமன்றத் தொகுதி (பஇ)
பதவியில்
2001–2011
முன்னையவர்கிர்ந்தரமாலிக்
பின்னவர்கிர்ந்தரமாலிக்
பதவியில்
1991–1996
முன்னையவர்திகேந்திர புரகயசுதா
பின்னவர்கிர்ந்தரமாலிக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சனவரி 1958 (1958-01-20) (அகவை 66)
இரோக்மாரா, கசார் மாவட்டம், அசாம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்சமூக சேவகர்

மேற்கோள்கள்

தொகு
  1. Rahul Karmakar (24 May 2016), CM Sonowal and his team: Meet the leaders at Assam's helm, Hindustan Times
  2. My Neta Profile
  3. "Members of 14th Assam Legislative Assembly". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 13 May 2018.
  4. Sarbananda Sonowal sworn in as first BJP CM of Assam, Deccan Chronicle, 25 May 2016
  5. One MLA from Barak Valley finds place in first BJP Cabinet in Assam பரணிடப்பட்டது 8 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம், Newsmen, 24 May 2016

வெளி இணைப்புகள்

தொகு
  • Parimal Suklabaidya on Facebook
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிமல்_சுக்லபைதியா&oldid=3999699" இலிருந்து மீள்விக்கப்பட்டது