அசாம் அரசு
அசாம் அரசு அல்லது அஸ்ஸாம் அரசு (Government of Assam) என்பது இந்திய மாநிலமான அசாம் மாநில அரசாகும். இது அசாம் ஆளுநர் தலைமையிலான நிர்வாகக் குழு, நீதித்துறை மற்றும் சட்டமன்றக் கிளை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அரசாங்க இருக்கை | குவகாத்தி |
---|---|
சட்டம் | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | பிசுவசித் டைமேரி[1] |
துணை சபாநாயகர் | நுமல் மோமின்[2] |
சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் | 126 |
செயல் | |
ஆளுநர் | குலாப் சந்த் கட்டாரியா[3] |
முதலமைச்சர் | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா[4] |
தலைமைச் செயலாளர் | பபன் குமார் போர்தாகூர், IAS[5] |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | குவகாத்தி உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | விஜய் பிசுனோய் |
இம்மாநிலத்தின் தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரைக் கொண்டுள்ளது, தற்போதைய ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா இருக்கின்றார்.
அரசாங்கத்தின் தலைவராக முதலமைச்சர் இருக்கின்றார், தற்போதைய முதலமைச்சராக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா இருக்கின்றார்.[4]
இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் வங்காள மொழி (அசாமிய எழுத்துமுறை) ஆகியன அசாமின் அலுவல்முறை மொழிகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Speakers since 1937". assamassembly.gov.in.
- ↑ "List of Deputy Speakers since 1937". assamassembly.gov.in.
- ↑ "The Governor of Assam, Assam gov portal".
- ↑ 4.0 4.1 "Assam Legislative Assembly – Chief Ministers since 1937". assamassembly.gov.in.
- ↑ PTI (2022-09-01). "New Assam chief secretary Paban Kumar Borthakur takes charge". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.