பரிவர்த்தனை (திரைப்படம்)

2023 தமிழ் திரைப்படம்

பரிவர்த்தனை (Parivarthanai) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். மணிபாரதி இயக்கிய இப்படத்தில் சுர்ஜித், சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் 2023 செப்டம்பர் 15 அன்று வெளியானது.[1][2]

பரிவர்த்தனை
இயக்கம்எஸ். மணிபாரதி
தயாரிப்புபொரி செந்திவேல்
இசைரஷாந்த் அர்வின்
நடிப்பு
  • சுர்ஜித்
  • சுவாதி
  • ராஜேஸ்வரி
ஒளிப்பதிவுகே. கோகுல்
படத்தொகுப்புரோலக்ஸ்
கலையகம்எம்எஸ்வி புரொடக்சன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 15, 2023 (2023-09-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • நவீனாக சுர்ஜித் கோபிநாத்
  • பவித்ராவாக சுவாதி
  • நந்தினியாக ராஜேஸ்வரி
  • பாரதி மோகன்
  • திவ்யா ஸ்ரீதர்
  • மோகித்
  • ஸ்மேஹா
  • சித்ரா நவீனின் தாயாக (ஒளிப்படத்தில்)

தயாரிப்பு

தொகு

இயக்குநர் எஸ். மணிபாரதி தனது மற்றொரு படமான ஸ்ரீகாந்த் நடித்த தி பெட் படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் ஈடுபட்டடுவரும் நிலையில், இப்படத்தில் பணியாற்றினார்.[3] பல தொலைக்காட்சி நடிகர்கள் இப் படத்தில் நடித்துள்ளனர்.[4]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வி. ஜே. பி. ரகுபதி எழுதியுள்ளார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நெஞ்சுக்குள்ள... நெஞ்சுக்குள்ள"  சாம் விஷால் 03:42
2. "சின்னஞ்சிறு மனசுக்குள்ள.."  செல்தில் தாஸ், இராஜலட்சுமி 02:42

வரவேற்பு

தொகு

இப்படத்தை வெளியிட திட்டமிட்ட நாளில் இருந்து ஒரு வார தாமதத்திற்குப் பிறகு, படம் 2023 செப்டம்பர் 15 அன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் படம் வெளியானது.[5] தினத்தந்தியின் ஒரு விமர்சகர், படத்தின் சில காட்சிகளில் இருந்த "தர்க்கப்பிழையை" கேள்விக்குட்படுத்தி படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[6] மாறாக மாலை மலரின் ஒரு விமர்சகர், படத்தை "இரசிக்கதக்கது" என்று குறிப்பிட்டார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Parivarthanai" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  2. "Parivarthanai Movie Review" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  3. Bureau, N. T. (2022-01-06). "'The Bed' is a suspense thriller" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  4. "சின்னத்திரை கலைஞர்கள் உருவாக்கிய பரிவர்த்தனை". 2023-01-01. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  5. https://www.filmibeat.com/tamil/news/2023/7-direct-tamil-movies-releasing-this-week-in-theatres-to-compete-with-shah-rukh-khans-jawan-here-i-363969.html
  6. தினத்தந்தி (2023-09-18). "பரிவர்த்தனை - சினிமா விமர்சனம்". பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  7. maalaimalar (2023-09-14). "Parivarthanai". Archived from the original on 2023-09-27. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவர்த்தனை_(திரைப்படம்)&oldid=4161939" இலிருந்து மீள்விக்கப்பட்டது