பருத்தியூர் ராமர் கோயில்
பருத்தியூர் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
பருத்தியூர் ராமர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவாரூர் |
அமைவு: | திருவாரூர் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
அமைவிடம்
தொகுஇக்கோயில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் பருத்தியூர் என்னுமிடத்தில் உள்ளது. இவ்வூர் பருத்தியூர் எனவும், ஆவணம் பருத்தியூர் எனவும் வழங்கப்படுகிறது.[1]
வரலாறு
தொகுஇந்தியா முழுவதம் ராமர் கதை, ராமநாத பாராயணம், ராமர் மேல் சங்கீதங்கள் ஆகியவற்றைப் பாடிய பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி இக்கோயிலை அமைத்தார்.[1] கோயில் கட்ட நினைத்து தடாகம் அமைக்க நிலத்தை தோண்டியபோது அங்கு கிடைத்த சிலையைப் பிரதிட்டை செய்து கோயிலை இக்கோயிலை எழுப்பினார்.[2]
கோயில் அமைப்பு
தொகுதெற்கு நோக்கிய சன்னதியில் ராம பரிவாரத்தைக் காணலாம். அழகு மிக்க ராமருக்கு சிறப்பான சிற்பங்கள் அமைந்த கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வாறு அமைந்த ராமர்களாக வடுவூர் ராமர், மதுராந்தகம் ராமர், வடக்கு பிணையூர் ராமர் ஆகிய சிற்பங்களைக் கூறுவர்.[3]
பிற சன்னதிகள்
தொகுஇக்கோயிலில் வரதராஜர், மகாலட்சுமி, விசுவநாதர், விசாலாட்சி ஆகியோர் உள்ளனர். தில்லைவிளாகத்தில் உள்ளதைப் போன்று இக்கோயிலிலும் வினையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கின்ற வாய்ப்பினை அனைவரும் பெறலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 இரா.ரகுநாதன், அருள் தரும் பஞ்சராமர் தலங்கள், தினமணி, வெள்ளி மணி, 27 மார்ச் 2020
- ↑ (in ta) அயோத்திக்கு நிகரான பஞ்ச ராமர் தலங்கள். 2024-04-04. https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/1225791-pancharama-places-similar-to-ayodhya.html.
- ↑ பார்வதி அருண்குமார், பருத்தியூர் ராமரைக் காத்த மாரி, தினமணி ஜோதிடம், 27 டிசம்பர் 2013