பரோனியல் கடித உறை

பரோனியல் கடித உறை என்பது பல கடித உறை வகைகளுள் ஒன்று. இக் கடித உறை ஏறத்தாழச் சதுர வடிவம் கொண்டது எனினும், முழுமையான சதுர வடிவம் அல்ல. ஒட்டுவதற்கான இதன் மூடி உறையின் நீளப் பக்கத்தில் அமைந்திருக்கும். இம்மூடி முக்கோண வடிவில் கூரான முனையுடன் காணப்படும். இவ்வுறையின் பொருத்துக்கள் மூலைவிட்டப் பொருத்து வகையைச் சேர்ந்தவை. "பரோனியல்" என்னும் பெயர் ஐரோப்பிய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட தரத்தில் உள்ள பிரபுக்களைக் குறிக்கும் "பாரன்" என்னும் சொல்லில் இருந்து உருவானது. இதனால் இவ்வகை உறைகள் உயர் சமூக மதிப்புக்குரிய தேவைகளுக்கே பயன்படுத்தப் பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

பரோனியல் கடித உறை

பரோனியல் கடித உறைகள் பொதுவாக முறையான அழைப்பிதழ்கள், அறிவித்தல்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வைத்து அனுப்புவதற்குப் பயன்படுகின்றது. இது சில வேளைகளில் உள்ளுறை, வெளியுறை என இரண்டு உறைகள் ஒன்றுள் இன்னொன்று வைக்கத்தக்க வகையில் உற்பத்தி செய்யப்படுவது உண்டு. இதற்காக உள்ளுறை, வெளியுறையிலும் சற்றுச் சிறிதாகச் செய்யப்படும்.

இவ்வகைக் கடித உறைகள் பல்வேறு அளவுகளைக் கொண்டனவாகவும், வேறுபட்ட அளவு விகிதங்களைக் கொண்டனவாகவும் செய்யப்படுகின்றன. இவ் வேறுபாடுகளுக்கு பெயர்கள் அல்லது எண் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 4 பரோனியல், 5 பரோனியல், 5.5 பரோனியல், 6 பரோனியல், கிளாட்சுட்டன், அசுட்டர், லீ என்பன இவற்றுட் சிலவாகும்.

தரப்படுத்தப்பட்ட அளவுகள்

தொகு
 
பரோனியல் வகைக் கடித உறை அளவுகள் ஒப்பீட்டு வரைபடம்
பெயர் உறை அளவு
(அங்குலம்)
மிகப்பெரிய
உள்ளடக்க அளவு
4 பரோனியல் 3.625 × 5.125 3.375 × 4.875
5 பரோனியல் 4.125 x 5.625 3.875 × 5.375
5.5 பரோனியல் 4.375 × 5.75 4.125 × 5.5
6 பரோனியல் 4.75 × 6.5 4.5 × 6.25
கிளாட்சுட்டன் 3.5625 × 5.5625 3.3125 × 5.3125
அசுட்டர் 3.626 × 5.625 3.5 × 5.375
லீ 5.25 × 7.25 5.125 × 7

மேல் தரப்பட்டுள்ள அளவுகள் அனைத்தும் அங்குலத்தில் உள்ளன. இவை ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அளவுகள் ஆகும். இவற்றுள் "கிளாசுட்டன்" மிகவும் சிறியது. அஞ்சல் செய்வதற்கு இது பயன்படுத்தப்படுவது இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோனியல்_கடித_உறை&oldid=3979103" இலிருந்து மீள்விக்கப்பட்டது