பர்சினிக்கடவு பாம்பு பூங்கா

கேரள பாம்பு பூங்கா

பர்சினிக்கடவு பாம்பு பூங்கா (Parassinikkadavu Snake Park) என்பது தென்னிந்தியாவில் உள்ள கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாம்பு பூங்கா ஆகும். இது கண்ணூர் மாநகராட்சியில் இருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் அமைந்துள்ள அந்தூர் நகராட்சியில் உள்ளது. இந்தப் பாம்பு பூங்காவானது கண்ணூரிலிருந்து தளிப்பறம்பா செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 17 இல் 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவில் அமைந்துள்ளது.

பர்சினிக்கடவு பாம்பு பூங்கா
நுழைவு
Map
11°59′25″N 75°23′21″E / 11.9902°N 75.3893°E / 11.9902; 75.3893
அமைவிடம்இந்தியா, கண்ணூர் மாவட்டம், பர்சினிக்கடவு
உறுப்புத்துவங்கள்CZA[1]

பாம்புகள் கண்காட்சி

தொகு

இந்த பூங்காவில் பலவிதமான பாம்புகளும், பிற சிறிய விலங்குகளும் உள்ளன, இதில் ஸ்பெக்டாக்கிள் நாகம், இராச நாகம், ரஸ்ஸலின் விரியன், கிரெய்ட் மற்றும் பல்வேறு விரியன் பாம்புகள் உள்ளன. பைதான் உள்ளிட்ட விஷமற்ற பாம்புகளும் பெருமளவில் உள்ளன. இந்த பூங்கா பாம்புகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இவற்றில் பல இனங்கள் படிப்படியாக அழிந்து வருகிம் இனங்களாகும். இங்கு நடத்துப்படும் செயல் விளக்கக் காட்சியில், பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாகங்கள் மற்றும் விரியன் போன்ற உள்ளிட்ட பலவிதமான பாம்புகளைக் கொண்டு காட்சி நடத்தி பாம்புகளைப் பற்றிய பழமையான அச்சங்களையும் மூடநம்பிக்கைகளையும் தணிக்க முயற்சி செய்கிறார்கள். [சான்று தேவை] ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பாம்புகளிலிருந்து விஷத்தை பிரித்தெடுப்பதற்கான ஆய்வகம் இங்கு அமைக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.

 
பர்சினிக்கடவு பாம்பு பூங்காவில் ஒரு பகுதி

நுழைவு கட்டணம்

தொகு
வயது நுழைவு கட்டணம் (ரூ)
5 ஆண்டுகளுக்கு கீழே இலவசம்
5 ஆண்டுகளுக்கு மேல் 20
18 ஆண்டுகளுக்கு மேல் 30
80 ஆண்டுகளுக்கு மேல் இலவசம்

பாம்பு கடி சிகிச்சை மையம்

தொகு

பாபினிசேரி விஷா சிக்கிட்சா சொசைட்டி (பாம்பு கடி சிகிச்சை மையம்) 1964 ஆம் ஆண்டில் கேரளத்தின் கண்ணூரில் உள்ள பாப்பினிசேரியில் தொடங்கப்பட்டது. இந்த மையம் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, பாம்பு கடியால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் இப்பகுதியில் உள்ள ஒரே மையமாகசெயல்பட்டுக் கொண்டுள்ளது. இங்கு இதுவரை பத்து இலடசத்துக்கும் கூடுதலான பாம்புகடியால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டுளது.

குறிப்புகள்

தொகு
  1. "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.

புற இணைப்புகள்

தொகு