பறக்கும் கார்

பறக்கும் கார் (Flying car) என்பது தனிப்பட்ட ஒரு வகையான விமான வாகனமாகும். சாலையில் செல்லக்கூடிய விமானம் என்றும் இதை கூறலாம். தரை மற்றும் காற்று இரண்டு பாதைகளிலும் போக்குவரத்து வசதியை இவ்வாகனம் வழங்குகிறது. "பறக்கும் கார்" என்ற சொல் சில நேரங்களில் மிதவை வானூர்தியையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து பல மூல முன்மாதிரிகள் கட்டப்பட்டு வருகின்றன. நிலைத்த இறக்கை வானூர்தி போன்ற பல்வேறு விமான தொழில்நுட்பங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. சில வாகனங்கள் உண்மையான செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கச் செயல்திறனை கொண்டவையாக உள்ளன. 2021 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு சாலையிலும் பயணிக்கக்கூடிய முதல் பறக்கும் காரை பிஏஎல்-வி என்ற டச்சு நிறுவனம் உற்பத்தி செய்யும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது.

பறக்கும் கார்களின் தோற்றம் பெரும்பாலும் எதிர்காலவியலாளர்களால் முன் கணிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் முயற்சிகள் எதிர்பார்க்கும் முறையில் உற்பத்தியை எட்ட முடியாமல் போனதால், "எனது பறக்கும் கார் எங்கே?" என்ற ஒரு நகைச் சொற்றொடர் உருவாகிவிட்டது. கற்பனை மற்றும் அறிவியல் புனைகதைகளில் பறக்கும் கார்கள் பிரபலமான கருப்பொருளாக வலம்வருகின்றன.

தொடக்ககால முயற்சிகள்

தொகு

1926 ஆம் ஆண்டு என்றி ஃபோர்டு ஒரு சோதனை ஒற்றை இருக்கை விமானத்தை முன்மொழிந்தார். தொலைதூர பறக்கும் முயற்சியில் விமானம் விபத்துக்குள்ளானதால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. விமானியும் இவ்விபத்தில் உயிரிழந்தார். [1] இதுவோர் பறக்கும் கார் அல்ல என்றாலும் அது அந்த நேரத்தில் பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மலிவு விலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு விமான தயாரிப்பாக இது இருக்கும் என்று கருதப்பட்டு இந்நிகழ்வு பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. தானியங்கி ஊர்திகள் போலவே இவையும் தயாரிக்கப்படும், சந்தைப்படுத்தப்படும், விற்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும் என்று மக்கள் கருதினார்கள் . இந்த விமானம் எதிர்காலத்தில் அந்தக் கால ஃபோர்டு நிறுவனத்தின் வாகன மாதிரி டி போலவே பொதுவானதாகிவிடும் என்றும் நம்பினார்கள்.

1940 ஆம் ஆண்டு என்றி ஃபோர்டு பிரபலமாக கணித்தார்: "எனது வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள்”. ஒரு கூட்டு விமானம் மற்றும் மோட்டார் கார் ஒன்று விரைவில் வருகிறது. நீங்கள் சிரிக்கலாம், ஆனால் அது வரும்." என்று 1940 ஆம் ஆண்டு என்றி ஃபோர்டு பிரபலமாக கணித்துக் கூறினார். [1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_கார்&oldid=3846455" இலிருந்து மீள்விக்கப்பட்டது