பறவையுண்ணி

பறவையுண்ணி (Avivore) என்பது பறவைகளை உணவாக வேட்டையாடும், பறவைகளை தன் உணவில் பெரும்பகுதியாகக் கொண்டிருக்கும் விலங்குகள் ஆகும். இத்தகைய பறவை உண்ணும் விலங்குகள் பலவாக உள்ளன.

அமெரிக்க கெசுட்ரல்

பறவைகள்

தொகு

மற்ற பறவைகளை உணவாகச் சிறப்பாக வேட்டையாடும் பறவைகளில் வல்லூறு மற்றும் அசிபிடர் ஆகும். இப்பறவைகளின் பொதுவான அம்சங்களில் மண்டை ஓட்டின் வடிவமும் அடங்கும். இது கழுத்தை முறுக்கும் இயக்கங்களுக்குச் சிறப்பாகக் கட்டமைக்கப்படவில்லை என்றாலும், அலகினைப் பயன்படுத்திப் பிடித்து நசுக்குவதற்கு நன்கு அறியப்படுகிறது. பறவைகளை உண்ணும் கொன்றுண்ணிப் பறவைகள் மற்ற கொன்றுண்ணிகளை விட அதிக பாலியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இப்பறவைகளில் பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட உருவத்தில் பெரியன.

வைரி, சின்ன வல்லூறு, ஐரோவாசியச் சிட்டுபருந்துமற்றும் கூரிய பளபளப்பான பருந்து போன்ற சில பறவையினங்கள் மரம் அல்லது புதரில் மறைந்திருந்து தங்கள் இரைக்குத் தெரியாதவகையில் தாக்கி இரையைப் பிடிக்கின்றன. இதற்கு நேர்மாறாக, லானர் பால்கன் கிடைமட்ட நாட்டம் மூலம் பறவைகளைத் திறந்த வெளியில் வேட்டையாடுகிறது. அப்லோமடோ வல்லூறு பதுங்கியிருக்கும் மற்றும் நீட்டிக்கப்பட்ட பறத்தலையும் பயன்படுத்தும்.[1] பொரி வல்லூறு மணிக்கு 300 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் அதிக உயரத்திலிருந்து பறக்கும் பறவைகளைப் பிடிக்கின்றது.

நியூசிலாந்தின் அழிந்துபோன ஆசுடின் கழுகு, மோவா போன்ற பெரிய பறக்க முடியாத பறவை இனங்களையும் வேட்டையாடியது.

பாலூட்டிகள்

தொகு

சில பாலூட்டிகள், பறவை மாமிச உண்ணிகளாகப் பறவைகளை உணவில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பெரும்பாலும் பென்குயின்களை வேட்டையாடும் வயது வந்த சிறுத்தை கடல்நாய், ஆர்க்டிக் நரி ஆகியவை கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றன. இங்கு முர்ரேஸ், ஆக், கடல்புறா மற்றும் பிற கடற்பறவைகளின் கூட்டமைப்பு அதிகம் உள்ளன. குறுவால் மரநாய் நியூசிலாந்தில் தக்காகே மற்றும் கிவி போன்ற பறக்க முடியாத பறவைகளை வேட்டையாடும். எனவே இவை பாதுகாப்பற்றவையாக இருக்கும். எப்போதாவது பறவைகளை வேட்டையாடும் மற்ற பறவையின பாலூட்டிகளில் பெரும்பாலான மாமிச உண்ணிகள் அடங்கும். வாலில்லா குரங்கு, சிம்பன்சி, தேவாங்கு முதல் மனிதர்கள் வரை பல முதனிகள் இதில் அடங்கும். ஓர்க்கா திமிங்கலம், ஓப்போசம் மற்றும் பிற பைம்மாவினம், எலி மற்றும் பிற கொறித்துண்ணிகள், முள்ளெலி மற்றும் பிற பூச்சியுண்ணிகள் மற்றும் வெளவால் இந்த வரிசையினை சேர்ந்தவை..

பல பாலூட்டி சிற்றினங்கள் பறவைகளைச் சிறப்பாக வேட்டையாடுபவையாக உள்ளன. கறகால் பூனை மற்றும் சேர்வல் எனும் இரண்டு நடுத்தர அளவிலான பூனைகள், பறக்கும் பறவைகளைப் பிடிக்க இவற்றின் பாய்ச்சல் திறனுக்காக அறியப்படுகின்றன. சில சமயங்களில் ஒரே நேரத்தில் இரண்டு. இரை கிடைக்காத பட்சத்தில் வீட்டுப் பூனைகள் சில சமயங்களில் பறவைகளைக் கொன்று உண்ணலாம். சிவப்பு நரி மற்றும் மார்டென்சு உட்பட சில மாமிச உண்ணிகள், பறவைகளை உபரியாகக் கொல்வதில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது. குரூக் (1972), கம்பர்லேண்ட் கடற்கரையில் உள்ள ஒரு கூட்டமைப்பில் நான்கு சிவப்பு நரிகள் ஒரே இரவில் 230 கறுப்புத் தலைக் கடற்காகங்களைக் கொன்றதைக் கவனித்தார். அதே நேரத்தில் 3%க்கும் குறைவான காகங்களைச் சாப்பிட்டதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.[1] பெரிய நாக்டியூல் வௌவால் தெற்கு ஐரோப்பாவின் வானத்தில் சிறிய வலசைப் பறவைகளை வேட்டையாடுவதாக நம்பப்படுகிறது.

அணில், குரங்குகள் மற்றும் பைன் மார்டென்ஸ் போன்ற பல பாலூட்டிகள் வாய்ப்பு கிடைக்கும் போது பறவை முட்டைகளையும் குஞ்சுகளையும் உண்ணும்.

ஊர்வன

தொகு

முட்டை உண்ணும் பாம்பு பறவைகளின் முட்டைகளை உண்பதில் நிபுணத்துவம் பெற்றது. முட்டைகளை இப்பாம்புகள் முழுவதுமாக விழுங்குகிறது. தன் முதுகெலும்பினைப் பயன்படுத்தி முட்டைகளை உடைக்கிறது.

நீர்நில வாழ்வன

தொகு

லிம்னோனெக்டசு மெகாசுடோமியாசு என்ற கோரைத் தவளை பறவைகள் மற்றும் பூச்சிகளை வேட்டையாடுகிறது.[2]

சிலந்தி

தொகு

கோலியாத் சிலந்தி (தெரபோசா பிளாண்டி) ஓசனிசிட்டினை சாப்பிடுவதைக் கண்ட ஆய்வாளர்களால் இப்பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Northern Aplomado Falcon". Pima.gov. 1986-03-27. Archived from the original on 2006-05-11. பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
  2. "Bird-Eating Fanged Frog Found in Thailand". CBS News. 2009-09-25. பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவையுண்ணி&oldid=3765059" இலிருந்து மீள்விக்கப்பட்டது