பலேர்மோ கால்பந்துக் கழகம்

பலேர்மோ கால்பந்துக் கழகம் (Palermo Football Club) என்பது ஓர் இத்தாலியக் கால்பந்துக் கழகம் ஆகும். இது சிசிலிய நகரமான பலெர்மோவில் 1900 நவம்பர் 1 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது சிசிலியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கால்பந்துக் கழகமும், அத்துடன் நாட்டின் ஏழாவது பழமையான விளையாட்டுக் கழகமும் ஆகும்.[2].

பலேர்மோ கால்பந்துக் கழகம்
Palermo F.C.
முழுப்பெயர்பலேர்மோ கால்பந்துக் கழகம்
அடைபெயர்(கள்)I Rosanero
Le Aquile
தோற்றம்1 நவம்பர் 1900; 124 ஆண்டுகள் முன்னர் (1900-11-01) (Anglo Palermitan Athletic and Football Club)
1920; 104 ஆண்டுகளுக்கு முன்னர் (1920) (US Palermo)
1941; 83 ஆண்டுகளுக்கு முன்னர் (1941) (US Palermo-Juventina)
1987; 37 ஆண்டுகளுக்கு முன்னர் (1987) (US Palermo)
2019; 5 ஆண்டுகளுக்கு முன்னர் (2019) (SSD Palermo)
ஆட்டக்களம்ரென்சோ பார்பரா அரங்கு
ஆட்டக்கள கொள்ளளவு36,365[1]
உரிமையாளர்ஹேரா ஹோரா S.r.l.
அவைத்தலைவர்டாரியோ மிரி
தலைமைப் பயிற்றுனர்ரொபெர்ட்டோ பொசுகாலியா
கூட்டமைப்புதொடர் C குழு C
2019-20தொடர் D குழு I, 18 இல் 1-வது
இணையதளம்கழக முகப்புப் பக்கம்

இக்கழகம் தனது உச்சநிலை வெற்றியை 2000களில் அடைந்தது. இக்காலகட்டத்தில் அ தொடரில் மூன்று தடவைகள் ஐந்தாம் நிலையைப் பிடித்தது. அத்துடன் 2005–06 ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் 16 அணிகளின் சுற்றில் இடம் பிடித்தது.

ஐரோப்பியப் போட்டிகளில், இவ்வணி ஐந்து தடவைகள் யூஈஎஃப்ஏ கிண்ண/ஐரோப்பா லீக் போட்டிகளில் விளையாடியது. 2007 ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ தரவரிசையில் 51-வது இடத்தைப் பிடித்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Renzo Barbera" (in Italian). PalermoCalcio.it. Archived from the original on 23 April 2011. பார்க்கப்பட்ட நாள் 4 May 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Figc: Palermo escluso da Serie B, ripescato Venezia" (in Italian). La Repubblica. 12 July 2019. https://palermo.repubblica.it/sport/2019/07/12/news/figc_palermo_escluso_da_serie_b_ripescato_venezia_-231039066/. பார்த்த நாள்: 12 July 2019. 
  3. UEFA Team Ranking 2007 kassiesa.home.xs4all.nl