பல்நிறைவுறா கொழுப்பு அமிலம்

பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் [Polyunsaturated fatty acids, (PUFAs]) ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்களாகும். இப்பிரிவில், பல முக்கிய சேர்மங்களான இன்றியமையா கொழுப்பு அமிலங்களும், உலர் எண்ணெய் பண்புகளைக் கொண்டவையும் உள்ளன.

வேதி வடிவங்களைக் கொண்டு பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் பல்வேறு குழுமங்களாகப் பிரிக்கப்படுகின்றன:

மெத்திலீன்-இடைமறி பாலியீன்கள்

தொகு
மெத்திலீன்-இடைமறி இரட்டைப் பிணைப்புகள்
-C-C=C-C-C=C-

பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், ஒற்றை மெத்திலீன் தொகுதியால் இடைமறிக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒருபக்க இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன. (இவ்வடிவம் சில வேளைகளில், டைவீனைல் மீத்தேன் அமைப்பு என்றழைக்கப்படுகின்றது ) [1]

அனைத்து இன்றியமையா கொழுப்பு அமிலங்களும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 மெத்திலீன் இடைமறிக்கப்பட்ட கொழுப்பு அமிலங்களாகும்.

பொது பெயர் கொழுமிய பெயர் வேதி பெயர்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஹெக்சாடெக்காடிரையீனோயிக் அமிலம் (HTA) 16:3 (n-3) அனைத்து ஒருபக்க 7,10,13-ஹெக்சாடெக்காடிரையீனோயிக் அமிலம்
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA) 18:3 (n-3) அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்
இஸ்டீரிடோனிக் அமிலம் (SDA) 18:4 (n-3) அனைத்து ஒருபக்க-6,9,12,15,-ஆக்டாடெக்காடெட்ராயீனோயிக் அமிலம்
இகோசாடிரையீனோயிக் அமிலம் (ETE) 20:3 (n-3) அனைத்து ஒருபக்க-11,14,17-இகோசாடிரையீனோயிக் அமிலம்
இகோசாடெட்ராயீனோயிக் அமிலம் (ETA) 20:4 (n-3) அனைத்து ஒருபக்க-8,11,14,17-இகோசாடெட்ராயீனோயிக் அமிலம்
இகோசாபென்டாயீனோயிக் அமிலம் (EPA, டிம்னோடோனிக் அமிலம்) 20:5 (n-3) அனைத்து ஒருபக்க-5,8,11,14,17-இகோசாபென்டாயீனோயிக் அமிலம்
ஹெனெய்கோசாபென்டாயீனோயிக் அமிலம் (HPA) 21:5 (n-3) அனைத்து ஒருபக்க-6,9,12,15,18-ஹெனெய்கோசாபென்டாயீனோயிக் அமிலம்
டொகோசாபென்டாயீனோயிக் அமிலம் (DPA, குளுபனோடோனிக் அமிலம்) 22:5 (n-3) அனைத்து ஒருபக்க-7,10,13,16,19-டொகோசாபென்டாயீனோயிக் அமிலம்
டொகோசாஹெக்சாயீனோயிக் அமிலம் (DHA, செர்வோனிக் அமிலம்) 22:6 (n-3) அனைத்து ஒருபக்க-4,7,10,13,16,19-டொகோசாஹெக்சாயீனோயிக் அமிலம்
டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம் 24:5 (n-3) அனைத்து ஒருபக்க-9,12,15,18,21-டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம்
டெட்ராகோசாஹெக்சாயீனோயிக் அமிலம் (நிசினிக் அமிலம்) 24:6 (n-3) அனைத்து ஒருபக்க-6,9,12,15,18,21-டெட்ராகோசாஹெக்சாயீனோயிக் அமிலம்
பொது பெயர் கொழுமிய பெயர் வேதி பெயர்
ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள்
லினோலெயிக் அமிலம் 18:2 (n-6) அனைத்து ஒருபக்க-9,12-ஆக்டாடெக்காடையீனோயிக் அமிலம்
காமா-லினோலெனிக் அமிலம் (GLA) 18:3 (n-6) அனைத்து ஒருபக்க-6,9,12-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்
இகோசாடையீனோயிக் அமிலம் 20:2 (n-6) அனைத்து ஒருபக்க-11,14-இகோசாடையீனோயிக் அமிலம்
டைஹோமோ-காமா-லினோலெனிக் அமிலம் (DGLA) 20:3 (n-6) அனைத்து ஒருபக்க-8,11,14-இகோசாடிரையீனோயிக் அமிலம்
அராகிடோனிக் அமிலம் (AA) 20:4 (n-6) அனைத்து ஒருபக்க-5,8,11,14-இகோசாடெட்ராயீனோயிக் அமிலம்
டொகோசாடையீனோயிக் அமிலம் 22:2 (n-6) அனைத்து ஒருபக்க-13,16-டொகோசாடையீனோயிக் அமிலம்
அட்ரெனிக் அமிலம் 22:4 (n-6) அனைத்து ஒருபக்க-7,10,13,16-டொகோசாடெட்ராயீனோயிக் அமிலம்
ஆஸ்பான்ட் அமிலம் 22:5 (n-6) அனைத்து ஒருபக்க-4,7,10,13,16-டொகோசாபென்டாயீனோயிக் அமிலம்
டெட்ராகோசாடெட்ராயீனோயிக் அமிலம் 24:4 (n-6) அனைத்து ஒருபக்க-9,12,15,18-டெட்ராகோசாடெட்ராயீனோயிக் அமிலம்
டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம் 24:5 (n-6) அனைத்து ஒருபக்க-6,9,12,15,18-டெட்ராகோசாபென்டாயீனோயிக் அமிலம்

ஒமேகா-9

தொகு
பொது பெயர் கொழுமிய பெயர் வேதி பெயர்
ஒற்றை மற்றும் பல்நிறைவுறா ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள்
ஒலெயிக் அமிலம் 18:1 (n-9) ஒருபக்க-9-ஆக்டாடெக்கனோயிக் அமிலம்
இகோசனோயிக் அமிலம் 20:1 (n-9) ஒருபக்க-11-இகோசனோயிக் அமிலம்
மீட் அமிலம் 20:3 (n-9) அனைத்து ஒருபக்க-5,8,11-இகோசாடிரையீனோயிக் அமிலம்
எருசிக் அமிலம் 22:1 (n-9) ஒருபக்க-13-டொகோசனோயிக் அமிலம்
நெர்வோனிக் அமிலம் 24:1 (n-9) ஒருபக்க-15-டெட்ராகோசனோயிக் அமிலம்
ஒற்றைநிறைவுறா

மேற்கோள்கள்

தொகு
  1. Baggott, James (1997). The divinylmethane pattern in fatty acids. Salt Lake City, UT: Knowledge Weavers.