பல்லாக்சிமெத்திலீன் இருமெத்தில் ஈதர்கள்

பல்லாக்சிமெத்திலீன் இருமெத்தில் ஈதர்கள் (Polyoxymethylene dimethyl ethers) என்பவை H3CO(CH2O)nCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வகை கரிமச் சேர்மங்களைக் குறிக்கும். இவை பாலியாக்சிமெத்திலீன் டைமெத்தில் ஈதர்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. இவ்வாய்ப்பாட்டிலுள்ள n குறிப்பாக 3 முதல் 8 வரையிலான எண்களைக் குறிக்கும்.

பல்லாக்சிமெத்திலீன் இருமெத்தில் ஈதர்கள்
இனங்காட்டிகள்
ChemSpider இல்லை
பண்புகள்
H3CO(CH2O)nCH3
வாய்ப்பாட்டு எடை மாறுபடும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருமீத்தாக்சிமீத்தேன் எனப்படும் மெத்திலாலுடன் பார்மால்டிகைடு அல்லது பாராபார்மால்டிகைடு போன்ற பார்மால்டிகைடுக்கு சமமான சேர்மங்கள்[1] அல்லது மூவாக்சேன்[2] போன்றவற்றில் ஒன்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் பல்லாக்சிமெத்திலீன் இருமெத்தில் ஈதர்கள் உருவாகின்றன.

ஒரு கரைப்பானாகவும் டீசல் எரிபொருளுடன் கூட்டுசேர் பொருளாகவும் இதைப்பயன்படுத்துகிறார்கள்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Arvidson M., Fakley M.E., Spencer M.S. (1987). "Lithium halide-assisted formation of polyoxymethylene dimethyl ethers from dimethoxymethane and formaldehyde". Journal of Molecular Catalysis 41: 391–393. doi:10.1016/0304-5102(87)80118-9. http://www.sciencedirect.com/science/article/pii/0304510287801189. 
  2. Qi Zhao; Hui Wang; Zhang-feng Qin; Zhi-wei Wu; Jian-bing Wu; Wei-bin Fan; Jian-guo Wang (2011). "Synthesis of polyoxymethylene dimethyl ethers from methanol and trioxymethylene with molecular sieves as catalysts". Journal of Fuel Chemistry and Technology 39 (12): 918–923. doi:10.1016/S1872-5813(12)60003-6. 
  3. Pellegrini, L., Marchionna, M., Patrini, R., and Florio, S. (2013), "Emission Performance of Neat and Blended Polyoxymethylene Dimethyl Ethers in an Old Light-Duty Diesel Car", SAE Technical Paper 2013-01-1035, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4271/2013-01-1035{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)