பல்லி
பல்லிகள் புதைப்படிவ காலம்:முந்தைய சுராசிக் – ஓலோசீன், | |
---|---|
பல்வேறு வகையான பல்லி இனங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
பெருவகுப்பு: | நாற்காலி
|
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பல்லி Günther, 1867
|
குடும்பம் | |
ஏறத்தாழ 40 குடும்பங்கள் உள்ளன. |
பல்லிகள் என்பவை செதிலுடைய ஊர்வன வரிசையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். இவற்றில் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன. இவை அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.[1].
பெரும்பாலான பல்லி இனங்கள் நான்கு கால்களைக் கொண்டுள்ளன. மற்ற இனங்கள் பாம்பு போல கால்களற்ற நீளமான உடலைக் கொண்டுள்ளன. காட்டில் வாழும் பறக்கும் பல்லி போன்ற சில இனங்கள் பறக்கும் திறன் பெற்றுள்ளன.
கொன்றுண்ணி வகையைச் சேர்ந்த பல்லிகள் காத்திருந்து இரையைப் பிடிக்கின்றன. பல்வேறு சிறு பல்லி இனங்கள் பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன. கொமடோ டிராகன் போன்ற சில பெரிய பல்லி இனங்கள் நீர் எருமை போன்ற பாலூட்டிகளைக் கொன்று உண்கின்றன.
பல்லிகள் தங்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க நஞ்சு, உருமாறும் திறன், தன்னிச்சையான இரத்தப்போக்கு, இழந்த வாலை மீண்டும் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
இலக்கியத்தில் பல்லி
தொகுபல்லி என்பதுவே கரணியப் பெயர் தான். சொல்லுவது பல்லி. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள்(சகுனம்) பார்த்தபடி நிற்பர். "நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடுபார்த்திருக்கும் என் மனைவி" என்ற சக்திமுற்றப் புலவரின் பாடல்கள் இதைப் புலப்படுத்தும்.
பழக்கவழக்கங்கள்
தொகுஇலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், "பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர்.
காட்சியகம்
தொகு-
புழுப்பல்லி
-
முட்பல்லி
-
தோலுரிக்கும் வீட்டுப்பல்லி
குறிப்புகள்
தொகு