வீட்டுப்பல்லி

Filozoa

வீட்டுப்பல்லி (ஆங்கிலப் பெயர்: common house gecko, உயிரியல் பெயர்: Hemidactylus frenatus) என்பது வீடுகளின் விட்டத்தில் காணப்படும் பல்லி ஆகும்.

வீட்டுப்பல்லி
Hemidactylus frenatus
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலுடைய ஊர்வன
குடும்பம்:
ஜிகோனிடே
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
H. frenatus
இருசொற் பெயரீடு
Hemidactylus frenatus
சிலேகெல், 1836[1]
     பூர்வீக வாழ்விடங்கள்

பெரும்பாலான பல்லிகள் இரவாடிகள். பகல் முழுவதும் பதுங்கியிருந்து இரவில் இரைக்காகப் பூச்சிகளைத் தேடும். இரவில் விளக்குகளுக்கு அருகில் பூச்சிகளைத் தேடி வீடுகள் மற்றும் பிற கட்டடங்களின் சுவர்களில் இவை ஏறுவதை காணமுடியும். மேலும் இவற்றின் சத்தம் மூலமும் கண்டறிந்து கொள்ள முடியும்.

இவை 75 முதல் 150 மில்லி மீட்டர் நீளம் வளரக்கூடியவை. 5 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை. இச்சிறு பல்லிகள் நஞ்சு அற்றவை. மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியவை அல்ல. துன்பம் விளைவித்தால் நடுத்தர அளவு முதல் பெரிய அளவு வரை இருக்கக்கூடிய பல்லிகள் கடிக்கலாம். எனினும் இவற்றின் கடியானது தோலைக் துளைக்கக்கூடிய வகையில் இருந்தாலும், இவை பொதுவாக சாந்தமானவை. வெப்பமண்டல பல்லி ஒன்றான Hemidactylus frenatus ஆனது சூடான, ஈரப்பதமிக்க பகுதிகளில் செழித்து வளர்கிறது. இது அப்பகுதிகளில் அழுகும் மரங்களில் வசிக்கும். பூச்சிகளைத் தேடி உண்டு வாழும். நகர்ப்புறங்களிலும் வாழக்கூடியது. இந்த உயிரினம் எளிதாக தகவமைத்து கொள்ளக்கூடியது. பூச்சிகள் மற்றும் சிலந்திகளை உண்ணக்கூடியது. பலவீனமான அல்லது நடத்தை ரீதியில் முரட்டுத்தனமான மற்ற பல்லிகளை இவை இடமாற்றம் செய்து விடுகின்றன.

வாழ்விடம் தொகு

பெரும்பாலான வீட்டுப்பல்லிகள் இரவாடிகள் ஆகும். பகலில் மறைந்திருந்து இரவில் பூச்சிகளை உண்ணும். இவை இரவு விளக்குகளின் அருகில் பூச்சிகளைப் பிடிப்பதைப் பார்க்கலாம்.

சகுனங்கள் தொகு

 
வேலூர்க் கோட்டையின் சிவன் கோயில் மண்டபத்தில் இரு வீட்டுப்பல்லிச் சிற்பங்கள், (2012)

பல்லி சத்தமிடுவதை வைத்துச் சகுனங்கள் கணிக்கப்படுகிறது. இவை உடலின் மேல் விழுவதை வைத்து அதற்கு ஏற்ற பலன்கள், பரிகாரங்கள் கணிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "ITIS Standard Report Page: Hemidactylus frenatus". ITIS Report. ITIS-North America. பார்க்கப்பட்ட நாள் 2009-06-29.
  2. "ഗൗളിശാസ്ത്രം | Mashithantu | English Malayalam Dictionary മഷിത്തണ്ട് | മലയാളം < - > ഇംഗ്ലീഷ് നിഘണ്ടു". Dictionary.mashithantu.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  3. "Hindu Omens". Oldandsold.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.

உசாத்துணை தொகு

  • Cook, Robert A. 1990 Range extension of the Darwin house gecko, Hemidactylus frenatus. Herpetofauna (Sydney) 20 (1): 23-27
  • Darevsky I S; Kupriyanova L A; Roshchin V V 1984 A new all-female triploid species of gecko and karyological data on the bisexual Hemidactylus frenatus from Vietnam. Journal of Herpetology 18 (3) : 277-284
  • Edgren, Richard A. 1950 Notes on the Neotropical population of Hemidactylus frenatus Schlegel Natural History Miscellanea (55): 1-3
  • Edgren, R. A. 1956 Notes on the neotropical population of Hemidactylus frenatus Schlegel. Nat. Hist. Misc. 55: 1-3.
  • Jerdon, T.C. 1853 Catalogue of the Reptiles inhabiting the Peninsula of India. Part 1. J. Asiat. Soc. Bengal xxii [1853]: 462-479
  • McCoy, C. J.;Busack, Stephen D. 1970 The lizards Hemidactylus frenatus and Leiolopisma metallica on the Island of Hawaii Herpetologica 26 (3): 303
  • Norman, Bradford R. 2003 A new geographical record for the introduced house gecko, Hemidactylus frenatus, at Cabo San Lucas, Baja California Sur, Mexico, with notes on other species observed. Bulletin of the Chicago Herpetological Society. 38(5):98-100 [erratum in 38(7):145]
  • Ota H 1989 Hemidactylus okinawensis Okada 1936, junior synonym of H. frenatus in Duméril & Bibron 1836. J. Herpetol. 23 (4): 444-445
  • Saenz, Daniel;Klawinski, Paul D. 1996 Geographic Distribution. Hemidactylus frenatus. Herpetological Review 27 (1): 32

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுப்பல்லி&oldid=3810955" இலிருந்து மீள்விக்கப்பட்டது