பல்லி கல்யாணச்சக்கரவர்த்தி
பல்லி கல்யாணச்சக்கரவர்த்தி (Balli Kalyanachakravarthy) ஓர் இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியும் ஆவார். பல்லி கல்யாண் சக்ரவர்த்தி என்றும் இவர் அழைக்கப்படுகிறார், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக 2021 முதல் ஆந்திரப் பிரதேச சட்ட சபையில் பணியாற்றி வருகிறார்.[1] கல்யாணச்சக்கரவர்த்தி நெல்லூர் மாவட்டம் கூடூர் நகரைச் சேர்ந்தவர் [2] நிகிபா நிகழ்நேர வர்த்தக நிறுவனத்தை இணைந்து நிறுவினார்.
பல்லி கல்யாணச்சக்கரவர்த்தி | |
---|---|
ஆந்திர பிரதேச சட்ட சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மார்ச்சு 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 7, 1984 |
அரசியல் கட்சி | ஒய்.எசு.ஆர்.காங்கிரசு கட்சி |
துணைவர் | சுவேதா தண்ணிரு |
பெற்றோர் | பல்லி துர்கா பிரசாத் ராவ் |
கல்யாணச்சக்கரவர்த்தியின் தந்தை பாலி துர்கா பிரசாத் ராவ் ஆவார். ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் நீண்டகால உறுப்பினராக இவர் இருந்தார். 2019 ஆம் ஆண்டு மக்களவைக்கு திருப்பதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தந்தை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட பிறகு மாரடைப்பால் செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அலுவலகத்திலேயே இறந்தார்.[3]
2021 ஆம் ஆண்டு கல்யாணச்சக்கரவர்த்தி தனது தந்தையின் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட நினைத்தார்.[2] இருப்பினும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அதற்குப் பதிலாக கல்யாணச்சக்கரவர்த்தியை ஆந்திரப் பிரதேச சட்ட மேலவைக்கு வேட்பாளராகப் பரிந்துரைக்க முன்வந்தார். கல்யாணச்சக்கரவர்த்தி இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார், 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று சட்டமன்ற உறுப்பினர்களால் ஆறு வருட காலத்திற்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் [4] . 31 மார்ச் 2021 அன்று பதவியேற்றார் [5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Balli Kalyanachakravarthy". Andhra Pradesh Legislative Council. பார்க்கப்பட்ட நாள் October 9, 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "YSRC names 6 for Andhra Pradesh MLC polls under MLA quota". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. February 26, 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
- ↑ Sharma, Rajesh (2021-02-25). "ఎమ్మెల్సీ అభ్యర్థుల ఎంపికలో చాణక్యం" [Chanakyam in the selection of MLC candidates]. TV9 Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
- ↑ "All six YSRCP candidates unanimously get elected as MLCs". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-09. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
- ↑ "Andhra Pradesh: Six new members of Council take oath". The Hans India (in ஆங்கிலம்). 2021-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.
- ↑ "ఆరుగురు ఎమ్మెల్సీల ప్రమాణ స్వీకారం" [Swearing in of six MLCs]. Prajasakti (in தெலுங்கு). April 1, 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.