பல்லுட்புறச் சிகிச்சை

பல்லுட்புற சிகிச்சை (Endodontic therapy) என்பது சொத்தை அடைந்த பல்லை அகற்றாது நோய்த்தொற்றை நீக்கவும் வருங்காலத்தில் நுண்ணுயிரித் தொற்றுக்களிலிருந்து பல்லைக் காப்பாற்றவும் பற்கூழில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை செய்முறைகளாகும். இந்தச் செய்முறைகள் பொதுவழக்கில் "பல்வேர்க்குழிஅல்லது பல் வேர் சிகிச்சை (Root canal treatment) எனப்படுகிறது. பல்வேர்க் குழிகளும் அவற்றின் பற்கூழ் அறைகளும் பற்களின் உள்ளே அமைந்துள்ள உள்ளீடற்ற பகுதிகளாகும்; இங்கு நரம்புத் திசுக்கள், குருதிக்குழல்கள் மற்றும் உயிரணுத் தொகுதிகளும் அடங்கயுள்ளன. பல்லுட்புற சிகிட்சையில் உள்ள படிநிலைகளாவன:

  1. பற்கூழ் அறையின் உள்ளே உள்ள கட்டமைப்பை நீக்குவது,
  2. வெற்றிடமான அறைகளை துப்புரவாக்கி சரிசெய்வது,
  3. நுண்ணிய அராவிகளையும் கொண்டும் குறிப்பிட்ட நீர்மங்களை பாய்ச்சியும் களங்கங்களை நீக்குவது,
  4. களங்கமற்ற குழிகளை மரப்பால் பிசினுடன்(Gutta- percha) துத்தநாக ஆக்ஸைடு, பிஸ்மத் ஆக்ஸைடு சேர்ந்த கலவைக் கொண்டு நிரப்புதல்.
பல்வேர்க் குழி செய்முறை: சொத்தையான அல்லது உடைந்த பல், துளைத்தலும் துப்புரவாக்கலும், நுண் அராவிகள் மூலம் அராவுதல், மீள்மத்தினால் நிரப்பப்படுதலும் பல் தலை பொருத்தலும்

சில சிகிட்சை முறைகளில் பிச்பநோல் எ கலந்துள்ள அல்லது கலக்காத இப்பாக்சி பிசின் மரப்பால் பிசினை பிணைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[1] பல்லுட்புற சிகிட்சைக்குப் பின்னர் குறிப்பிட்ட பல் "உயிரற்று" இருக்கும். மீண்டும் மேற்பகுதியில் தொற்று ஏற்பட்டால் பல்வேர் முனை அறுவைத் தேவைப்படும்.

இந்தச் செய்முறை தகுந்த கவனத்துடன் செய்யப்பட்டால் எவ்வித வலியும் தெரியாது;[2] இருப்பினும் வழமையாக இந்தச் சிகிட்சை பற்சிகிட்சைகளிலேயே மிகவும் பயப்படப்படும் சிகிட்சையாக உள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. M. A. Marciano, R. Ordinola-Zapata, T. V. R. N. Cunha, M. A. H. Duarte, B. C. Cavenago, R. B. Garcia, C. M. Bramante, N. Bernardineli, I. G. Moraes (April 2011). "Analysis of four gutta-percha techniques used to fill mesial root canals of mandibular molars". International Endodontic Journal 44: 321-329. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2591.2010.01832.x/abstract. 
  2. Root canal pain. Causes of pain during or between root canal therapy appointments

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லுட்புறச்_சிகிச்சை&oldid=3894961" இலிருந்து மீள்விக்கப்பட்டது