பளிங்கு முகடு பல்லி

ஊர்வன இனம்
பளிங்கு முகடு பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
புரோன்கோசெலா
இனம்:
பு. மார்மோராடா
இருசொற் பெயரீடு
புரோன்கோசெலா மார்மோராடா
கிரே, 1845

பளிங்கு முகடு பல்லி (புரோன்கோசெலா மார்மோராடா-Bronchocela marmorata), பளிங்கு இரத்தம் உறிஞ்சி அல்லது பளிங்கு அகாமிடு பல்லி என்பது பல்லி சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 800 மீ உயரத்தில் தாழ் நில திப்டெரோகார்ப் மற்றும் மலைக்காடுகளில் வாழ்கிறது.[1] இது பொதுவாக மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும் காணப்படும். இது பூச்சிகளை உணவாக உண்ணுகிறது. இது மரங்களின் அடிப்பகுதியில் முட்டைகளை இடுவதற்கு மண்ணை தோண்டி குழி எடுக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pitogo, K., Binaday, J., Cielo, K.L.S. & Meneses, C. (2022). Bronchocela marmorata. The IUCN Red List of Threatened Species [1]
  2. Republic of the Philippines - Stamps & Postal History. philippinestamps.net
"https://ta.wikipedia.org/w/index.php?title=பளிங்கு_முகடு_பல்லி&oldid=3784879" இலிருந்து மீள்விக்கப்பட்டது