பள்ளபாளையம், ஈரோடு
பள்ளபாளையம் (Pallapalayam), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி 15 வார்டுகள் கொண்டது. இது ஈரோடு நகரததிற்கு தெற்கே 22 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னிமலையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பள்ளபாளையம் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°23′10″N 77°36′56″E / 11.38611°N 77.61556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | பெருந்துறை |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,263 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-33 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2,164 குடியிருப்புகள் கொண்ட பள்ளபாளைய்ம் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 7,263 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 3,624 மற்றும் 3,639 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 508 - 7% ஆகும். சராசரி எழுத்தறிவு 65.6% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 1,425 மற்றும் 1 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.54%, கிறித்துவர்கள் 9.17% மற்றும் பிறர் 0.28% ஆக உள்ளனர்.[1] [2]
பொருளாதாரம்
தொகுவேளாண்மை மற்றும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு இப்பேரூராட்சியின் முக்கியத் தொழில்கள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ [Pallapalayam https://www.censusindia.co.in/towns/pallapalayam-population-erode-tamil-nadu-803529 Pallapalayam Population Census 2011]
- ↑ Pallapalayam Population Census 2011