பள்ளிகளில் உயிரியளவியல்
பள்ளிகளில் உயிரியளவியல் (Biometrics In Schools) என்பது பள்ளிகளில் உயிரியளவுகள் முறையில் தனித்துவமான உடல் ரீதியான அல்லது நடத்தை பண்புகளைக் கொண்டு, தானாகவே தனிநபர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் அமைப்பு முறையாகும். இம்முறையில் மின்னணுவியல் முறைப்படி தகவல்களை சேகரித்தல்,பகுப்பாய்வு செய்தல், மற்றும் அளவீடுகளை ஏற்கனவே உள்ள தரவுகளைக் கொண்டு ஒப்பீடு செய்து மிகவும் துல்லியமான அடையாளங்களை கண்டறிதல் ஆகும். மேலும் பள்ளிகளில் நிகழும் அன்றாட செயல்முறைகளை கண்காணிக்கவும், உயிரிய முறையில் அளவீடு செய்து, பெற்ற முடிவுகளைக் கொண்டு பகுப்பு மற்றும் மீளாய்வு செய்து பள்ளி நடைமுறைகளை சீரமைப்பதற்கும் அல்லது தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு இனங்களைக் கண்காணிப்பதற்கும் உதவிபுரியும் தொழினுட்பம் இதுவாகும்.
பள்ளிகளில் உயிரியளவியல் முறையின் வகைகள்
தொகுஉலகளவில் உயிரியளவியல் சந்தையில் விரல் ரேகைப் பதிவு தொழினுட்பம் மிகப்பெரிய சந்தையளவைக் கொண்டது. பரவலாக கல்வி உள்ளிட்ட பல தொழிற்துறைகளால் விரல் ரேகைப் பதிவு முறை பின்பற்றப்படுகின்றன. விரல் ரேகைப்பதிவு முறையானது பழமையான, எளிய, நிறுவுவதற்கு எளிமையான, குறைந்தளவு செலவு பிடிக்கக்கூடியதாகும்[1].
- உள்ளங்கை நரம்பு அடையாளப் பதிவு முறை (palm vein recognition)
- கண்- கருவிழி அடையாளப் பதிவு முறை (iris recognition)
- முக அடையாளப் பதிவு முறை (face recognition)
போன்ற முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாலும், விரல் ரேகைப் பதிவு முறை என்பது அமெரிக்க கல்வி சந்தை உட்பட பல நாடுகளில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் தொழினுட்பம் ஆகும் [2].
பள்ளிகளில் உயிரியளவியல் முறையின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவம்
தொகுவளர்ந்த நாடுகளின் அரசாங்கப் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இந்த முறையை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்தியா, போன்ற வளரும் நாடுகளில் தற்போது இம்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் முனைப்பு காட்டுவதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.[3][4][5].
அமெரிக்காவின் கல்வித்துறையில் பள்ளிகளில் உயிரியளவியல் முறையானது வளர்ந்து வரும் ஒரு தொழிநுட்பமாகும். டெக்நேவியோ என்ற சந்தை ஆராய்ச்சி அமைப்பின் புள்ளிவிவரப்படி 2014 முதல் 2019 வரை கல்வி உயிரியளவியல் சந்தையில் 23.65% அளவுக்கு (கூட்டு ஆண்டு வளர்ச்சிவீதம் (CAGR)) வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.[6]
தமிழகப்பள்ளிகளில் உயிரியளவியல் முறை
தொகுஇந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் உயிரியளவியல் முறையிலான வருகைப்பதிவு நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சோதனை அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது[7]. மேலும் இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு இதற்கான வல்லுனர் குழு ஒன்றும் ஏறஏற்படுத்தப்பட்டது.[8].
பிற துறைகளில் உயிரளவியல் முறை
தொகுஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு உயிரியளவியல் முறையிலான தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன [9][10] அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையை உயிரியளவியல் முறைப்படி பதிவு செய்யவும் முயற்சிகள் நடைபெறுகின்றன [11]. அதுபோல கடவுச்சீட்டு, உணவுப்பொருள் வழங்கள் துறை, பல்வேறு அரசுத்துறை சேவைகளுக்கும் இம்முறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது [12] பல தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் விவரங்களை், வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை உயிரியளவியல் முறையைில் பதிவு செய்யும் முறைக்கு மாறியுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fingerprint biometrics: A global strategic business report". www.strategyr.com. Global Industry Analysts, Inc. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.
{{cite web}}
: External link in
(help)|ref=
- ↑ Perala, A. "Biometrics in US education sector to see significant growth". www.findbiometrics.com. Findbiometrics Global Identity Management. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.
{{cite web}}
: External link in
(help)|ref=
- ↑ http://www.newindianexpress.com/states/telangana/2016/dec/15/biometric-system-to-track-teachers-attendance-soon-in-telangana-1549215.html
- ↑ https://secuwatch.wordpress.com/biometric-in-40000-schools/
- ↑ http://ns7.tv/ta/government-introduced-biometric-system-school.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://newtamiltimes.com/index.php/en/2016-05-20-11-12-30/item/1726-2016-07-06-07-15-30[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/25/biometric-attendance-at-tamil-nadu-schools-soon-1585621.html
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Aadhaar-worlds-largest-biometric-ID-system/articleshow/47063516.cms
- ↑ http://www.biometricupdate.com/tag/sri-lanka
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1121111
- ↑ http://srilanka.iom.int/iom/?q=biometrics-introduced-sri-lankan-passport-issuance-process-0 பரணிடப்பட்டது 2017-03-15 at the வந்தவழி இயந்திரம்.