பள்ளியாரத்தலம் பத்ரகாளி கோயில்

பள்ளியரத்தலம் பத்ரகாளி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டாவில் நெடும்பிரோம் கிழக்கில் (பொடியாடி, திருவல்லாவுக்கு அருகில்) அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும். [1]

சிறப்பு

தொகு

கோயிலின் தெய்வங்களாக தேவி, சிவனும் உள்ளனர். இக்கோயில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமானது. மூன்று தெய்வங்களும் ஒரே கருவறையில் காட்சியளிக்கும் வகையில் தனித்துவமான கருவறை கோயிலில் உள்ளது. அவ்வகையில் இது சிறப்பு பெற்றதாகும். பிரம்ம ராக்கதனுக்கு அவ்வப்போது பூசைகள் நடத்தப்படுகின்றன.

தீயாட்டு

தொகு

பத்ரகாளி தேவியின் ஆசீர்வாதத்திற்காக செய்யப்படுகின்ற பழமையான சடங்கான தீயாட்டு இங்கு தீயாட்டுண்ணி ' என்ற பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படுகிறது. பழங்காலத் தீயாத்துண்ணி குடும்பம் ஒன்று கோயிலுக்கு முன்பாக வசித்து வருகிறது. தீயாட்டுகளை அங்கு நடத்தும் பொறுப்பு இவர்களுடையதாகும்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு