பள்ளூர் இரேணுகேசுவரர் கோயில்

பள்ளூர் இரேணுகேசுவரர் கோயில் (இரேணுகேச்சரம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரம் அருகிலுள்ள பள்ளூர் சிவன் கோயிலாகும். மேலும், இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

இறைவர், வழிபட்டோர்

தொகு

தல வரலாறு

தொகு

பரசுராமரை இழந்த ரேணுகாதேவி, காஞ்சிக்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு உலகுக்கு ஒரு தெய்வமாக ஆனாள் என்பது வரலாறாகும்.[2]

அமைவிடம்

தொகு

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடக்கு எல்லை பகுதியில், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள திருமால்பூரையடுத்துள்ள வேலூர் மாவட்டம் பள்ளூர் என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 45. இரேணுகேச்சரப் படலம் 1574 - 1608
  2. "shaivam.org | இரேணுகேசுவரர் (இரேணுகேச்சரம்) | தல வரலாறு". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.
  3. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | ரேணுகேச்சரம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.

புற இணைப்புகள்

தொகு