பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி

பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி என்பது தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி. இப்பள்ளி தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில், தேனி கல்வி மாவட்டத்தின் கீழுள்ள பள்ளிகளுள் ஒன்றாகும். பழனிசெட்டிபட்டியிலுள்ள பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் இப்பள்ளி 1963 ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப் பெற்றது. பின்னர் 1988 ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப் பெற்றது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகத் தற்போது ரா. லதா என்பவர் இருந்து வருகிறார்.

பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி
அமைவிடம்
பழனிசெட்டிபட்டி,
தேனி மாவட்டம்,
தமிழ் நாடு
தகவல்
நிறுவனர்பழனியப்பா பாசன பரிபாலன சபை, பழனிசெட்டிபட்டி.
பள்ளி மாவட்டம்தேனி
கல்வி ஆணையம்முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்
தலைமை ஆசிரியர்ரா. லதா.
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்இருபாலர்கள்
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

பள்ளியில் படித்தவர்கள் தொகு

இப்பள்ளியில் படித்தவர்களில் சிலர்


வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. நடிகர் வையாபுரி பிறந்த தினம் இன்று (சினிமா பிளிட்ஸ் செய்தி)