பழனி அரசு அருங்காட்சியகம்
பாரம்பரிய மையம்
பழனி அரசு அருங்காட்சியகம் (Government Museum, Palani) தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ளது.
அமைவிடம் | பழனி |
---|---|
வகை | பாரம்பரிய மையம் |
அங்கீகாரம் | இந்திய கலாசாரத்துறை |
சேகரிப்புகள் | நாணயங்கள் |
சேகரிப்பு அளவு | 2000 |
இயக்குனர் | முதன்மைச் செயலர் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆணையாளர்[1] |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
காகித நோட்டுக்கள் மட்டுமன்றி பிளாஸ்டிக் நோட்டுக்கள், பல்வேறு வடிவிலான நாணயங்கள், இரும்பு, மரக்கட்டை, ஈயம், செம்பு, பித்தளை, தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.
பழங்கால மூங்கில், தோல்களால் ஆன நாணயங்களும்,கொண்டை ஊசி, கத்தி, சிப்பி, வட்டம், சதுரம், அறுகோணம் போன்ற வடிவங்களிலும், மன்னர் கால தங்க நாணயங்களும் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.[2]
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரத்திற்கு பின்பும் வெளியான பல்வேறு வகையான நோட்டுகள், நாணயங்களும் இங்கு காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-177-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2.
- ↑ "About the Department" (பி.டி.எவ்). தமிழ்நாடு அரசு. Department of Museums. pp. 4, 5. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
- ↑ "பழனி அரசு அருங்காட்சியகத்தில் உலக பணத்தாள்கள் கண்காட்சி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2016.
- ↑ "பழனி அரசு அருங்காட்சியகத்தில் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் சிறப்பு கண்காட்சி". தினதந்தி. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2016.