பவனண்
பாவணன் (Pavanan, 26 அக்டோபர் 1925- ஜூன் 2006, 22 ) தென்னிந்திய மாநிலமான கேரளாவில் பரவலாக அறியப்பட்ட பகுத்தறிவுவாதியும், இலக்கிய விமர்சகரும், இடது சாரி அரசியல் ஆர்வலருமாவார்.[1]
பாவணன் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | പവനൻ |
பிறப்பு | புத்தன் வீட்டில் நாரயணன் நாயர் அக்டோபர் 26, 1925 தலச்சேரி, கேரளம், இந்தியா |
இறப்பு | சூன் 22, 2006 | (அகவை 80)
பணி | நாத்திகர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், ஆர்வலர் |
வாழ்க்கைத் துணை | பார்வதி பாவணன் |
1965 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருதையும், 1979 இல் சோவியத் லேண்ட் நேரு விருதையும் வென்ற ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார். கேரள சாகித்ய அகாதமியின் (1977-84) செயலாளராகவும், கேரள தொழிற்சங்க சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், கேரள கலாமண்டலம் மற்றும் கேரள சங்கீத நாடக அகதாமியின் உறுப்பினராகவும் இருந்தார்.[2]
பாவணன் மலையாள கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக இருந்தார். இவர் பன்னிரண்டு புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பாவணன் அறக்கட்டளையானது "பாவணன் அறக்கட்டளை விருது" ஒன்றை நிறுவி இலக்கியப் படைப்புகளை அங்கீகரித்து கௌவுரவித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டில் மலையாள விமர்சகரும் எழுத்தாளருமான எம். கே. சானு இந்த விருதைப் பெற்றிருந்தார்.[3]
சுயசரிதை
தொகுபாவணன் 1925 அக்டோபர் 26 அன்று இந்திய மாநிலமான கேரளாவின் தலச்சேரி அருகேயுள்ள வயலாலம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை குத்தமத் குன்னியூர் குஞ்ஞிசங்கர குருப் மற்றும் தாய் புத்தன் வீட்டில் தேவகி அம்மா. இவர், காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் மகாராஜாவின் உயர்நிலைப்பள்ளியிலும், தலச்சேரியின் பிரென்னென் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
1944–46 காலப்பகுதியில், இவர், பிரித்தானிய இந்தியாவின் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். பின்னர், இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னர், வடக்கு கேரளாவில் கூட்டுறவுத் துறையில் ஆய்வாளாராகப் பணியாற்றினார்.
பத்திரிகைத் துறை
தொகு1949 ஆம் ஆண்டு முதல், பாவணன் தனது இடதுசாரி அரசியல் செயல்பாட்டோடு பத்திரிகைத் துறையையும் தனது வாழ்க்கையாக எடுத்துக் கொண்டார். இவர் ஒரு பத்திரிகையாளராக முதன்முதலில் "ஜெயகேரளம்" என்ற மலையாள பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராக இருந்தார். இது, சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது.
1952–53 காலப்பகுதியில், பிரிக்கப்படாத இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மலையாள அமைப்பான தேசாபிமானியுடன் பணியாளர்-நிருபராக மாறுவதற்கு முன்பு இவர் "பௌரசக்தி"யின் துணை ஆசிரியராக பணியாற்றினார். 1965-67 காலப்பகுதியில், இவர் "நவயுக"த்தின் ஆசிரியராகவும், இந்தியா பிரஸ் ஏஜென்சியின் நிருபராகவும் பணியாற்றினார். 1970-75 காலப்பகுதியில் சென்னை சோவியத் தகவல் அலுவலகத்தில் ஒரு ஆசிரியராகவும், 1984-86 காலப்பகுதியில் "மனோராஜ்ஜியம்" குழும வெளியீடுகளுடன் பொது ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், 1988-94 காலப்பகுதியில், கேரள அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட "விஸ்வ விஜன கோஷம்" என்ற கலைக்களஞ்சியத் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். 1975-78 க்கு இடையில் கேரள சாகித்ய அகாதமியின் உதவி செயலாளராகவும், 1978–84 காலப்பகுதியில் அதன் உறுப்பினர் செயலாளராகவும் இருந்தார்.
ஒரு பகுத்தறிவாளர்
தொகுஒரு பகுத்தறிவாளராக, கேரளாவின் நன்கு அறியப்பட்ட பகுத்தறிவுக் குழுவான "கேரள யுக்திவாடி சங்க"த்தின் உறுப்புச் சங்கமான "யுக்திரேகா""வின் நிறுவனர்-தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் தனது வாழ்க்கையின் கடைசியில் 4-5 ஆண்டுகளாக ஆல்சைமர் நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பு இவர் நீண்ட காலமாக அமைப்பின் தலைவராக இருந்தார்.[1]
இறப்பு
தொகுஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுவந்த பாவணன் 22 சூன் 2006 அன்று திருச்சூரில் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Writer-journalist Pavanan dead", தி இந்து, 23 June 2006, archived from the original on 24 January 2010, பார்க்கப்பட்ட நாள் 17 August 2009
- ↑ https://www.oneindia.com/2006/06/22/renowned-writer-pavanan-dead-1150959923.html
- ↑ https://timesofindia.indiatimes.com/city/kochi/pavanan-award-for-malayalam-critic-sanu/articleshow/14214211.cms
- தேசாபிமானி நாள் 23 சூன் 206.
- மாத்ருபூமி நாள் 23 சூன் 2006.
- மலையாள மனோரமா , நாள் 23 சூன் 2006.
வெளி இணைப்புகள்
தொகு- Journalist and author Pavanan passes away: Obituary at www.newkerala.com
- Obituary in Deshabhimani Malayalam Daily This link does not work