பவன் குமார் யாதவ்

இந்திய அரசியல்வாதி

பவன் குமார் யாதவ் (Pawan Kumar Yadav) [1] ஒரு இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1971 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2020 ஆம் ஆண்டு முதல் பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர் ககல்கான் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

பவன் குமார் யாதவ்
Pawan Kumar Yadav
பீகாரின் சட்டமன்றம்
பதவியில்
2020–பதவியில்
முன்னையவர்சதானந்த் சிங்
தொகுதிககல்கான் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சனவரி 1971 (1971-01-04) (அகவை 53)
பிறப்பெயிண்டி, பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

அரசியல் வாழ்க்கை தொகு

பவன் குமார் யாதவ் பீகார் சட்டமன்றத்திற்கு 2015 தேர்தலில் ககல்கான் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். 15% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். [2] [3] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இம்மாவட்டம் இந்திய தேசிய காங்கிரசின் கோட்டையாக இருந்தபோதிலும், எதிர்த்துப் போட்டியிட்டவர் பிரபல அரசியல்வாதியான சதானந்த் சிங்கின் மகனாக இருந்தாலும், யாதவ் 115,538 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரது எதிரியாகப் போட்டியிட்டவர் 72,379 வாக்குகள் மட்டுமே பெற்றார். [4] [5]

பதவிக்காலத்தில், யாதவ் பாகல்பூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வாதிட்டார், இந்நிலையம் பெரிய விமானங்களைக் கையாள முடியாது என்று வாதிட்டார். [6] 2021 ஆம் ஆண்டில், பகல்பூர் மாவட்டத்தில் இரயில் நிறுத்தங்கள் தொடர்பாக மாநில இரயில்வே அமைச்சர் அசுவனி வைசுணவை சந்தித்து பேசினார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "बिहार विधान सभा सचिवालय" [Bihar Legislative Assembly Secretariat] (PDF). Bihar Legislative Assembly (in இந்தி). 2020. பார்க்கப்பட்ட நாள் September 1, 2023.
  2. "Kahalgaon Election Results 2015". Election Trends (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-01.
  3. Shukla, Dilip Kumar (December 21, 2021). "बिहार के इस भाजपा विधायक को अदालत ने दी बड़ी राहत, साक्ष्य के अभाव में किया रिहा" [Court Gave Big Relief to This BJP MLA of Bihar, Released Due to Lack of Evidence]. Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் September 1, 2023.
  4. "Kahalgaon Assembly (Vidhan Sabha) Election Results 2020". Elections.in. பார்க்கப்பட்ட நாள் September 1, 2023.
  5. Singh, Shivendra (November 10, 2020). "कहलगांव विधानसभा सीट : बीजेपी के पवन कुमार यादव ने दर्ज की बड़ी जीत" [Kahalgaon Assembly seat: BJP's Pawan Kumar Yadav Registers Big Win]. Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் September 1, 2023.
  6. "बिहार विधानसभा में उठी भागलपुर एयरपोर्ट विस्तार की मांग, MLA ने कहा- सरकार चाहे तो कहलगांव में निर्माण संभव" [Demand for Expansion of Bhagalpur Airport Raised in Bihar Assembly, MLA Said - if Government Wants, Construction is Possible in Kahalgaon]. ETV Bharat News (in இந்தி). March 31, 2022. பார்க்கப்பட்ட நாள் September 1, 2023.
  7. Bajpai, Shivam (November 21, 2021). "रेल मंत्री अश्वनी वैष्णव से मिले कहलगांव MLA पवन कुमार यादव, प्रमुख ट्रेनों के ठहराव समेत की कई मांगे" [Kahalgaon MLA Pawan Kumar Yadav Met Railway Minister Ashwani Vaishnav, Made Many Demands Including Stoppage of Major Trains]. Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் September 1, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_குமார்_யாதவ்&oldid=3786552" இலிருந்து மீள்விக்கப்பட்டது