பவுண்டு (கால்நடைச் சிறை)

அடுத்தவர் தோட்டத்தில் மேயும் மாடு, ஆடு போன்றவற்றை அடைத்துவைக்கும் இடம்

விலங்கு பவுண்டு (Animal pound) என்பது சாலையில்[1] அல்லது அடுத்தவர் தோட்டத்தில் அத்துமீறி வந்த கால்நடைகளை சிறைபிடிக்கும் இடமாகும். விலங்குகளை அவற்றின் உரிமையாளர்களால் உரிமை கோரப்படும் வரை அல்லது சிறைபிடிக்கபட்டு பராமரித்த செலவைக் கொடுக்கும் வரை இந்த தனித்துவமான தொழுவத்தில் அடைத்துவைக்கப்படும் .[2]

வடக்கு எல்ம்ஹாம் கிராம பவுண்டு, நோர்போக்
The animal pound at Finchdean, Hampshire, England.
இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரின் பிஞ்ச்டீனில் உள்ள விலங்கு பவுண்டு.

சொற்பிறப்பியல்

தொகு

"பின்ஃபோல்ட்"மற்றும்"பவுண்ட்" ஆகிய சொற்கள் சாக்சன் இனமக்களிடமிருந்து உருவானவை. Pundfald மற்றும் pund ஆகிய இரண்டும் அடைத்துவைக்கும் இடத்தைக் (பட்டி) குறிப்பவையாகும்.

பவுண்டுக்கு பொறுப்பான ஊழியரின் பெயர் "பிண்டர்" என்பதாகும். இது சிலரின் குடும்பப்பெயராகவும் இருக்கிறது.

கிராம பவுண்டு

தொகு
 
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்தில் உள்ள ரோட் தீவின் க்ளோசெஸ்டர் டவுன் பவுண்ட், சு. 1748
 
கேபன்ஹர்ஸ்ட் பின்ஃபோல்ட், செஷயர். 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த தளத்தில் ஒரு பின்ஃபோல்ட் உள்ளது.
 
சோமர்செட்டின் ஸ்டாண்டன் ப்ரியரில் வட்ட கிராம பவுண்டு.

கிராம பவுண்டு பெரும்பாலான இங்கிலாந்தின் நடுக்கால கிராமங்களின் அம்சமாக இருந்தது.[சான்று தேவை] மேலும் இவை ஆங்கிலேயரின் குடியேற்றப் பகுதிகளான வட அமெரிக்கா, அயர்லாந்து, இந்தியா போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இது உயரமான மதில் சுவர் கொண்ட தொழுவமாகவும், பூட்டக்கூடிய கதவுகளைக் கொண்டதாகவும் இருக்கும். அத்துமீறி வந்த ஆடுகள், பன்றிகள், மாடுகள் ஆகியவற்றை உரிமையாளர்களால் உரிமை கோரப்படும் வரை அடைத்து வைத்திருப்பதே இதன் பொதுவாக பயன்பாடாகும். [மேற்கோள் தேவை] பொதுவாக தண்டத் தொகை அல்லது வரி செலுத்துவதும் வரை அவை அடைத்து வைக்கப்பட்டிருக்கும். பவுண்டு என்பது பொதுவாக 20 சதுர மீட்டர் (225 சதுர அடி) அல்லது 0.20 ஹெக்டேர் (1⁄2 ஏக்கர்) பரப்பளவுக்கு வட்டமாகவோ சதுரமாகவோ இருக்கும். கிராம பவுண்டுகளின் அளவும், வடிவமும் மாறுபடும். சில நான்கு பக்கங்கள் கொண்டு—செவ்வகம், சதுரம் அல்லது ஒழுங்கற்ற வடிவமாகவும்-மற்றவை வட்டமானவையாக இருக்கும். அளவு என்றால் அவை சில சதுர மீட்டர் (சில சதுர அடி) முதல் 0.5 எக்டேர்கள் (1.2 ஏக்கர்கள்) வரை பரப்பளவில் மாறுபடும். ஆரம்பகால பவுண்டுகள் முட்புதற்களாளான வேலிகளைக் கொண்டிருந்தன, ஆனால் பெரும்பாலானவை கல் அல்லது செங்கலில் கட்டப்பட்டவையாக இருந்தன. பவுண்டுகள் இடைக் காலத்திலிருந்து அறியப்படுகின்றன. 16 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பவுண்டு இருந்தன. இன்று எஞ்சியுள்ளவற்றில் பெரும்பாலானவை 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஆனால் பெரும்பாலானவை இடிந்து விழுந்துவிட்டன.[3]

1930 இல் சசெக்ஸ் கவுண்டி இதழில் குறிப்பிடபட்டுள்ளது:

ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பவுண்டு இருந்த்து. அங்கு தெருவில் திரியும் கால்நடைகள், பன்றிகள், வாத்துகள் போன்றவை அடைத்து வைக்கப்படும். அவற்றின் உரிமையாளர் அபராதம் (எவருடைய நிலத்திலாவது சேதம் ஏற்பட்டு சேதத்துக்கு அவர் கோரும் தொகை), அந்த விலங்குக்கு பவுண்டில் உணவு, தண்ணீர் கொடுத்து பராமரித்த ஊழியருக்கான கட்டணம் செலுத்தி விலங்கை ஓட்டிச் செல்லவேண்டும். மூன்று வாரங்களில் உரிமை கோரப்படாத, விலங்குகள் அருகிலுள்ள சந்தைக்கு ஓட்டிச் செல்லப்பட்டு அங்கு விற்கப்பட்டன. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் விலங்கால் பாதிக்கபட்டு அதை பறிமுதல் செய்பதவர் மற்றும் பவுண்டு பராமரிப்பாளருக்கு செல்லும்.[சான்று தேவை]

குறிப்புகள்

தொகு
  1. தினமலர். "சுற்றித் திரியும் கால்நடைக்கு ரூ.2,000 அபராதம்; பட்டியில் அடைக்கும் நடைமுறை மீண்டும் அமல்.. கலெக்டர் அதிரடி!". https://www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22. {{cite web}}: External link in |website= (help)
  2. Hubka 2004, ப. 84.
  3. Plaque at Tockholes Pinfold, Lancashire Tockholes Pinfold

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Village pounds
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுண்டு_(கால்நடைச்_சிறை)&oldid=4124389" இலிருந்து மீள்விக்கப்பட்டது