பவுன் சுவாங் ஹுவா
படகு பந்தய திருவிழா பவுன் சுவாங் ஹுவா [1] அல்லது பவுன் ஜுவாங் ஹுவா (லாவோ: ບຸນ ຊ່ວງ ເຮືອ) அல்லது லோய் கிராத்தோங் (லாவோ: ລອຍ ກະ called) என அழைக்கப்படுகிறது. இந்த படகுப் பந்தய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபரில் பௌத்த தவக்காலத்தின் முடிவில், குறிப்பாக லாவோஸில், கொண்டாடப்படுகின்றன,.
பவுன் சுவாங் ஹுவா (ບຸນຊ່ວງເຮືອ) | |
---|---|
கடைபிடிப்போர் | லாவோஸ் |
வகை | பௌத்தம் |
நாள் | அக்டோபர் 15 |
தொடர்புடையன | போயா (முழு நிலவு நாள்)(இலங்கையில்) வான் ஓக் பான்சா(தாய்லாந்தில்) தாடிங்யட் திருவிழா(மியான்மரில்) லபாப் டச்சென்(திபெத் மற்றும் பூடானில்) |
நகரங்களிலும் (குறிப்பாக வியஞ்சான், இலுவாங் பிரபாங், சவன்னாகேத்து, மற்றும் சாம்பஸ்ஸாக் மாகாணம்) மற்றும் மேக்காங் ஆற்றின் .கரையோரக் கிராமங்களிலும் சிறு படகுகள் கலந்து கொள்ளும் பந்தயங்கள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
படகுகள் பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்படுகின்றன. மேலும், மூங்கிலால் செய்யப்பட்ட சிறு படகுகள் மெழுகுவர்த்திகளுடன் அலங்கரிக்கப்பட்டு நீரோடைகள் மற்றும் ஆற்றில் விடப்படுகின்றன.
மரபின் தோற்றம்
தொகுசிறு படகுப் பந்தயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளது. மேக்கொங் நதி மற்றும் அதன் ஏராளமான துணை நதிகளைச் சுற்றி அன்றாட வாழ்க்கை பெரிதும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இது போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புக்கான ஒரு முக்கியமான வழிமுறையாக இருந்தது. கூடுதலாக, உணவிற்கான மூலமாக விளங்கும் மீன்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அமைகிறது.
இன்றைய சிறுபடகுப் போட்டிகள், அடிப்படையில் ஒரு சமூக, விளையாட்டு மற்றும் வர்த்தகரீதியான நிகழ்ச்சியாக இருந்தாலும், அது நாக வழிபாடு, மற்றும் நதிகளில் பாதுகாப்பளிக்கும் வியஞ்சான் நதி ஆவிகள் ஆகியவற்றோடு தொடர்புடையதாக இருக்கிறது. லாவோ நம்பிக்கைகள் படி, நெற்பயிர்களை சுமந்துகொண்டு சென்று தண்ணீரானது அவற்றைத் திருமபத் தருவதாகக் கருதும் நம்பிக்கையோடும் தொடர்புடையதாக உள்ளது.[2]
குறிப்புகள்
தொகு- ↑ BOUN SUANG HEUA, BOAT RACING FESTIVAL பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம், sur tourismlaos.org. Consulté le 22 septembre 2013.
- ↑ DK Eyewitness Travel Guide: Cambodia & Laos, Dorling Kindersley Ltd, 2013, p. 126