பஸ்ஸாஸ் டி பெட்ரோ
பஸ்ஸாஸ் டி பெட்ரோ (Bassas de Pedro) என்பது நீரில் மூழ்கிய கரைத்தட்டு அல்லது நீரில் மூழ்கிய பவளத் தீவு ஆகும். இது முன்யால் பார், படுவா கரைத்தட்டு ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[1]
பஸ்ஸாஸ் டி பெட்ரோ | |
---|---|
நாடு | இந்தியா |
State | இலட்சத்தீவுகள் |
உப தீவு | அமினிதிவி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,474.33 km2 (955.34 sq mi) |
Languages | |
• Official | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
புவியியல்
தொகுஇலட்சத்தீவுகளின் முதலாவது மிகப்பெரிய பவளத்தீவு இதுவேயாகும். இதன் கடற்காயல் பரப்பளவு 2474.33 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இலட்சத்தீவுகளின் மொத்தப் பரப்பளவில் 59 வீதமான பரப்பளவு இக்கரைத்தட்டிற்கே சொந்தமானதாகும். இக்கரைத்தட்டானது 12°31'வ இலிருந்து 13°41'வ வரை 130 கிலோமீற்றர்கள் வரை பரந்துள்ளது. தீவுகளோ, சிறு தீவு மேற்பரப்புக்களோ இங்கு காணப்படவில்லை. இக்கரைத்தட்டின் ஆழம் 46 தொடக்கம் 50 மீற்றர்கள் ஆகும்.