பகாங் சுல்தான் அப்துல்லா
பகாங் சுல்தான் அப்துல்லா அல்லது அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முசுதபா பிலா சா ஆங்கிலம்: Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah; ஜாவி: السلطان عبدالله رعاية الدين المصطفى بالله شاه الحاج ابن سلطان حاج احمد شاه المستعين بالله) மலேசிய நாட்டின் 16-வது பேரரசர் ஆவர். அதே வேளையில், இவர் பகாங் மாநிலத்தின் ஆறாவது சுல்தானும் ஆவர். [1]
பகாங் சுல்தான் அப்துல்லா Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah Sultan Abdullah Pahang | |||||||
---|---|---|---|---|---|---|---|
யாங் டி பெர்துவான் அகோங் பகாங் | |||||||
யாங் டி பெர்துவான் அகோங் | |||||||
ஆட்சி | 31 சனவரி 2019 – இன்று | ||||||
பதவியேற்பு | 30 சூலை 2019 | ||||||
முன்னிருந்தவர் | ஐந்தாம் முகம்மது | ||||||
பிரதமர் | இசுமாயில் சப்ரி யாகோப் | ||||||
பகாங் சுல்தான் | |||||||
அரசுப்பிரதிநிதி | 11 சனவரி 2019 – தற்போது வரையில் | ||||||
முன்னிருந்தவர் | அகமது சா | ||||||
முடிக்குரியவர் | தெங்கு அசனால் இப்ராகிம் சா | ||||||
முதலமைச்சர் | வான் ரொசுடி வான் இசுமாயில் | ||||||
துணைவர் | துங்கு அமீனா மைமுனா (தி. 1986) ஜூலியா ரைசு (தி. 1991) | ||||||
வாரிசு(கள்) | அமீர் நாசர் இப்ராகிம் (வளர்ப்பு) இசுகந்தர் (இ. 1990) அசனால் இப்ராகிம் முகம்மது இசுக்ந்தர் ரியாதின் அகமது இசுமைல் முவாட்சாம் அப்சான் அமீனா அபித்சதுல்லா ஜிகான் அசீசா அதியத்துல்லா இமான் அப்சான் இலீசா அமீரா இலியானா | ||||||
| |||||||
அரச குடும்பம் | பெந்தாரா | ||||||
தந்தை | பகாங்கின் அகமது சா | ||||||
தாய் | தெங்கு அம்புவான் அப்சான் | ||||||
பிறப்பு | 30 சூலை 1959 இசுதானா மங்கா துங்கல், பெக்கான், பகாங், மலாயா (இன்றைய பெக்கான், மலேசியா) | ||||||
சமயம் | இசுலாம் |
2019 சனவரி 24-ஆம் தேதி, இவர் தன் தந்தைக்கு அடுத்தபடியாக பகாங் மாநிலத்தின் சுல்தான் பதிவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2019 சனவரி 31-ஆம் தேதி, மலேசியப் பேரரசராக பொறுப்பேற்றார்.[2]
ஆரம்ப வாழ்க்கை
தொகுஇவர் பகாங் சுல்தான் அஜி அகமது ஷாவின் நான்காவது மகனாவார்.
கல்வி
தொகுஇவர் தன் ஆரம்பக் கல்வியை 1965-ஆம் ஆண்டு பகாங், கோலா லிப்பிஸ் நகரில் உள்ள கிளிபோர்ட் ஆரம்ப பள்ளியில் (Clifford School) தொடங்கினார். ஓராண்டுக்கு பின் பகாங், பெக்கான் அகமட் தேசியப் பள்ளியில் (Sekolah Kebangsaan Ahmad) தொடர்ந்து நான்கு ஆண்டுகளும்; அதன்பின் செயின்ட் தோமஸ் பள்ளியில் (St. Thomas Primary School) நான்கு ஆண்டுகளும் பயின்றார்.
1975-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள அல்டெகம் பள்ளியில் (Aldenham School) சேர்ந்தார். 1981-ஆம் ஆண்டு ஒற்செஸ்டெர் & குயின் எலிசபெத் (Worcester College Queen Elizabeth College) கல்லூரியில் அனைத்துலக மற்றும் அரசதந்திர உறவுமுறைக்கான பட்டம் பெற்றார்.
பகாங்கின் சுல்தான்
தொகு2019-ஆம் ஆண்டு சனவரி 15-ஆம் தேதி 59 வயதில் சுல்தான் அப்துல்லா, நீண்ட காலமாக உடல்நிலை குறைவுற்றிருந்த அவரின் தந்தையார் சுல்தான் அஜி அகமது ஷாவிற்குப் பதிலாக பகாங்கின் ஆறாவது சுல்தானாகப் பிரகடனப் படுத்தப்பட்டார். பகாங் சுல்தானின் அதிகாரப்பூர்வ இல்லமான இஸ்தானா அபு பக்காரில் (Istana Abu Bakar) அந்தப் பதவியேற்பு விழா நடந்தது. சுல்தான் அப்துல்லாவின் ஆட்சிக் காலம் 2019-ஆம் ஆண்டு சனவரி 11-ஆம் தேதி தொடங்குகிறது.[1][3]
பகாங்கின் சிம்மாசனத்திற்கு வந்தவுடன், அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முசுதபா பிலா சா (Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah) எனும் பட்டப் பெயரை ஏற்றுக் கொண்டார். துங்கு அசிசா ஆமினா மைமுனா இசுகந்தரியா பிந்தி அல்மர்கும் சுல்தான் இசுகந்தர் அவர்களை (Tunku Azizah Aminah Maimunah Iskandariah Binti Almarhum Sultan Iskandar), தம்முடைய அரசத் துணைவராக, 29 ஜனவரி 2019-இல் அறிவித்தார்.[4]
மலேசியப் பேரரசர் பொறுப்பு
தொகு2019 சனவரி 24-ஆம் தேதி, 251-ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் சுல்தான் அப்துல்லா பதினாறாம் மலேசியா பேரரசராக தேர்ந்தெடுக்கப்படடர். இவர் அரச பதவியைத் துறந்த முன்னாள் பேரரசர், கிளாந்தான் மாநிலத்தின் மன்னர் ஐந்தாம் முகமது (Muhammad V of Kelantan) என்பவருக்குப் பதிலாக இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.[5][6]
இவரின் மகுடம் சூட்டும் விழா, 2019 சனவரி மாதம் 31-ஆம் தேதி, கோலாலம்பூர் இஸ்தானா நெகாரா (Istana Negara), அரச மாளிகையில் நடைபெற்றது.[7]
இந்த மகுடம் சூட்டும் விழா மற்ற மலாய் ஆட்சியாளர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. இதே நிகழ்வில், பேராக் மாநிலத்தின் ஆட்சியாளர் சுல்தான் நசுரின் ஷா துணைப் பேரரசராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 "Tengku Abdullah to be proclaimed Pahang sultan on Jan 15". MalaysiaKini. 12 January 2019. https://www.malaysiakini.com/news/459940.
- ↑ "Pahang Sultan is our new King". thestar.com.my. Star Media Group Berhad. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ Nadirah H. Rodzi (16 January 2019). "Sultan Abdullah takes oath as the sixth Sultan of Pahang". The Straits Times. https://www.straitstimes.com/asia/se-asia/sultan-abdullah-takes-oath-as-sixth-sultan-of-pahang-0.
- ↑ Amin Ridzuan Ishak; Raja Norain Hidayah Raja Abdul Aziz; Siti Insyirah Tajuddin (29 January 2019). "Tunku Azizah Aminah Maimunah dimasyhurkan Tengku Ampuan Pahang". Harian Metro. https://www.hmetro.com.my/node/417382/amp.
- ↑ "King to be elected today". thestar.com.my. Star Media Group Berhad.
- ↑ "16th king to be announced today". nst.com.my. New Straits Times Press (M) Bhd. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ Saraya Mia (28 June 2019). "30 Julai cuti am sempena pertabalan Agong". Astro Awani. http://www.astroawani.com/berita-malaysia/30-julai-cuti-am-sempena-pertabalan-agong-211244?amp=1.