பாகலுங் மாவட்டம்
பாகலுங் மாவட்டம் (Baglung District) (நேபாளி: बागलुङ जिल्ला ⓘ), நேபாளத்தின் கண்டகி மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைநகரம் காளி கண்டகி ஆற்றின் கரையில் உள்ள பாகலுங் என்ற நகரம் ஆகும்.
இம்மாவட்டம் 1,784 சதுர கிலோ மீட்டரும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,68,613 மக்கள் தொகையும் கொண்டது. [1]
கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்
தொகுபாகலுங் மாவட்டம் 59 கிராம வளர்ச்சி சபைகளும், ஒரு நகராட்சி மன்றமும் கொண்டது. உயர்ந்த மலைப்பாங்கான பாகலாங் மாவட்டத்தில் பல மலை ஆறுகளையும், தொங்கும் பாலங்களையும் கொண்டது. இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். புன், தாபா, ராணா, மகர், செத்திரி, பிராமணர், நேவார் மக்கள், குரூங் மற்றும் தகாளி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
இம்மலை மாவட்டத்தில் மூலிகைச் செடிகள், நெல், சோளம், கோதுமை மற்றும் உருளைக் கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
தொகுபாகலுங் மாவட்டத்தின் கோடை கால அதிக பட்ச வெப்பம் 37.5 பாகை செல்சியஸ் ஆகவும், குளிர் கால குறைந்த பட்ச வெப்பம் -15 பாகை செல்சியஸ் ஆகவும் உள்ளது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்திலிருந்து 4,300 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவி உள்ளது.
நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[2] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Upper Tropical climate | 300 - 1,000 மீட்டர்கள் | 2.8% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் | 37.1% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் | 39.4% |
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம் | 3,000 - 4,000 மீட்டர்கள் | 18.6% |
மான்ட்டேன்# ஆல்பைன் புல்வெளிகள் & தூந்திரா | 4,000 - 5,000 மீட்டர்கள் | 2.1% |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013