பாகவத மேளா
பாகவத மேளா (Bhagavata Mela) என்பது தமிழ்நாட்டின், குறிப்பாக தஞ்சாவூர் பகுதியில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய இந்திய நடனமாகும். இது மெலட்டூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வைஷ்ணவ சமயத்தில் வருடாந்திர விழாவாக பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது, மேலும் இது நடன-நாடக செயல்திறன் கொண்ட கலையாகக் கொண்டாடப்படுகிறது.[1][2] ஆந்திரப் பிரதேசத்திலிருந்து, குச்சிப்புடி என்ற மற்றொரு இந்திய பாரம்பரிய நடனக் கலை தமிழ்நாட்டிற்கு வந்தது.
'பாகவதா' என்பது, இந்து சமயத்தில் பாகவத புராணத்தை குறிக்கிறது.[3] 'மேளா 'என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், அதாவது 'கூட்டம், குழுவாக கூடும் கூட்டம' என்ற பொருள்படும் ஒரு நாட்டுப்புற விழாவைக் குறிக்கிறது.[4] பாரம்பரிய பகவத மேளா இந்து மதத்தில் உள்ள புராணங்களைப் பற்றி கர்நாடக இசை அமைத்து நடத்தப்படுவதாகும்.[5][6]
வரலாறு
தொகுஆந்திரப் பிரதேசத்தில் காணப்படும் குச்சிப்புடி என்ற பண்டைய பாரம்பரிய இந்திய நடனத்திலிருந்து பாகவத மேளா தோன்றியது.[7][8] இந்த பிராந்தியத்தின் மீது இஸ்லாமிய படைகள் படையெடுத்து இந்து சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. இது 16 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் இந்துக் கலைஞர்கள் குடும்பங்கள் வெகுவாக இடம் பெயர வழி வகுத்தது, மேலும் நடனமானது நவீன பாகவத மேளாவாக உருவானது. [9][10] [11] விஜயநகர பேரரசு வீழ்ச்சியடைவதற்கு முன்னர், தக்கானப் பகுதியின் நீதிமன்ற ஆவணங்கள் அடிப்படையில் இந்திய மதங்கள் மற்றும் கலை ஆகியவற்றை வெகுவாக ஆதரித்து வந்துள்ளதென அறியப்படுகிறது. [9] [10] 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி அடிக்கடி போர்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகளைக் எதிர்கொண்டது, இது தக்கான சுல்தான்களின் ஆட்சியில் முடிவடைந்தது.[12] 1565ஆம் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியினால், கோவில்களும், அதனைச் சுற்றியுள்ள தக்கான நகரங்களும் அழிவைச் சந்தித்ததும், இசை கலைஞர்கள் மற்றும் நடன-நாடக கலைஞர்களும் தெற்கே குடிபெயர்ந்தனர். தஞ்சை இராச்சியம், ஆந்திராவில் இருந்து வந்த 500 குச்சிப்புடி கலைஞர்களின் குடும்பங்களை வரவேற்றன. இவ்வாறு வந்தவர்களுக்கு இந்து மத அரசன் அச்யுதப்பா நாயக்கர் வரவேற்று அவர்களுக்கென்று வாழ்வதற்கு நிலங்களை வழங்கினார். இந்தப் பகுதி தஞ்சாவூர் அருகே மேலட்டூர் என்ற ஊராக வளர்ந்தது. இந்த குடும்பங்கள் குச்சிப்புடி நடனத்தின் மூலம் நாடக கலாச்சாரத்தை நடத்துவதை பாகவத மேளா என்று அழைத்தனர்.
திரட்டு
தொகுபாகவத மேளாவானது இந்து கோயில்களில் அல்லது கோயிலுக்கு பக்கத்தில், பகலில் தொடங்கி இரவு வரை , அசல் குச்சிப்புடி கலைஞர்களைப் போலவே ஆண் பிராமணர்களால், கதைகளில் வரும் பெண்களின் பாத்திரம் போல் வேடமிட்டு பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.[3][13] நவீன காலங்களில் ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் இருவரும் இதில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தமிழ்நாட்டின் முக்கிய தொன்மையான நடனமான குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் - ஆகியவற்றின் செல்வாக்கைக் காட்டுவதற்கு உருவாகியுள்ளது.[6]
இந்தியாவின் அனைத்து பாரம்பரிய நடனங்களைப் போலவே, பாகவத மேளாவும் சைகை மொழியாகவும், சைகை மொழியிலும் சிக்கலான நடைப்பயிற்சி மற்றும் நடிப்பு (அபிநயம்) ஆகியவை ஆன்மீக செய்தியுடன் இந்து மத கதைகளை ஒருங்கிணைக்கிறது.[6][14]
குறிப்புகள்
தொகு- ↑ James R. Brandon; Martin Banham (1997). The Cambridge Guide to Asian Theatre. Cambridge University Press. pp. 72, 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-58822-5.
- ↑ Don Rubin; Chua Soo Pong; Ravi Chaturvedi (2001). The World Encyclopedia of Contemporary Theatre: Asia/Pacific. Routledge. pp. 139–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-26087-9.
- ↑ 3.0 3.1 James R. Brandon; Martin Banham (1997). The Cambridge Guide to Asian Theatre. Cambridge University Press. pp. 72, 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-58822-5.
- ↑ Bruno Nettl; Ruth M. Stone (1998). The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-4946-1.
- ↑ Don Rubin; Chua Soo Pong (2001). The World Encyclopedia of Contemporary Theatre: Asia/Pacific. Routledge. pp. 139–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-26087-9.
- ↑ 6.0 6.1 6.2 James R. Brandon; Martin Banham (1997). The Cambridge Guide to Asian Theatre. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-58822-5.
- ↑ The Cambridge Guide to Asian Theatre.
- ↑ Indian Ballet Dancing.
- ↑ 9.0 9.1 Ragini Devi 1990, ப. 67-68.
- ↑ 10.0 10.1 Reginald Massey 2004, ப. 79-80.
- ↑ Bilkees I. Latif (2010). Forgotten. Penguin Books. pp. 132, 71–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-306454-1.
- ↑ Forgotten.
- ↑ Jennifer Fisher; Anthony Shay (2009). When Men Dance:Choreographing Masculinities Across Borders. Oxford University Press. pp. 388 footnote 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-973946-2.
- ↑ Don Rubin; Chua Soo Pong; Ravi Chaturvedi (2001). The World Encyclopedia of Contemporary Theatre: Asia/Pacific. Routledge. pp. 139–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-26087-9.
நூற்பட்டியல்
தொகு- Ragini Devi (1990). Dance Dialects of India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0674-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Reginald Massey (2004). India's Dances: Their History, Technique, and Repertoire. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-434-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Tarla Mehta (1995). Sanskrit Play Production in Ancient India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1057-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Williams, Drid (2004). "In the Shadow of Hollywood Orientalism: Authentic East Indian Dancing". Visual Anthropology (Routledge) 17 (1): 69–98. doi:10.1080/08949460490274013. http://jashm.press.illinois.edu/12.3/12-3IntheShadow_Williams78-99.pdf. பார்த்த நாள்: 2019-03-28.