பாசியான்
பா சியான் அல்லது பாஹியான் (Fa Xian, Fa-Hien அல்லது Fa-hsien, பொ.ஊ. 337 – பொ.ஊ. 422) என்பவர் சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி. இவர் பொ.ஊ. 399–412 காலப்பகுதியில் பௌத்த நூல்களைத் தேடி நேபாளம், இந்தியா, மற்றும் இலங்கைக்கு இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டமைக்காக அறியப்படுகிறார். புத்தரின் பிறப்பிடமான லும்பினிக்கு சென்றமைக்காகவும் இவர் அறியப்படுகிறார்.
பாசியான் Fǎxiǎn | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | பொ.ஊ. 337 வுயாங், சீனா |
இறப்பு | பொ.ஊ. 422 |
சமயம் | பௌத்தம் |
குறிப்பிடத்தக்க ஆக்கம் | ஃபோகோஜி அல்லது பௌத்த நாடுகளின் விபரங்கள். |
இரண்டு ஆண்டுகள் இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பும் வழியில் பெரும் சூறாவளியில் சிக்கி தீவு ஒன்றில் (ஜாவா எனக் கருதப்படுகிறது) கரையொதுங்கினார். பின்னர் சீனாவின் லாவோசாங் நகரில் தங்கி தான் சேகரித்து வந்த பல பௌத்த நூல்களை மொழிபெயர்த்தார்.
தனது பயணத்தைப் பற்றிய இவரது தொடக்ககால பௌத்தம், பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பட்டுப் பாதை வழியே காணப்பட்ட பல நாடுகளின் புவியியல், வரலாறு ஆகியவற்றை எழுதினார்.
மேற்கோள்கள்
தொகு- Legge, James 1886. A Record of Buddhistic Kingdoms: Being an account by the Chinese Monk Fa-Hien of his travels in India and Ceylon (A.D. 399-414) in search of the Buddhist Books of Discipline பரணிடப்பட்டது 2009-01-24 at the வந்தவழி இயந்திரம். Oxford, Clarendon Press. Reprint: New York, Paragon Book Reprint Corp. 1965. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-21344-7
- Beal, Samuel. 1884. Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang. 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969. (Also contains a translation of Faxian's book on pp. xxiii-lxxxiii).
வெளி இணைப்புகள்
தொகு- A RECORD OF BUDDHISTIC KINGDOMS Being an Account by the Chinese Monk Fa-Hien of his Travels in India பரணிடப்பட்டது 2010-09-19 at the வந்தவழி இயந்திரம்
- Extracts from James Legge's translation [1] பரணிடப்பட்டது 2006-02-07 at the வந்தவழி இயந்திரம்