பாகிஸ்தானின் இசை

பாக்கித்தானின் இசை (Music of Pakistan) என்பது தெற்காசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மத்திய ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் நவீனகால மேற்கத்திய பிரபலமான இசை தாக்கங்களிலிருந்தும் மாறுபட்ட கூறுகளை உள்ளடக்கியது. இந்த பல தாக்கங்களுடன், ஒரு தனித்துவமான பாக்கித்தான் ஒலி வெளிப்பட்டுள்ளது. [1]

பாரம்பரிய இசை

தொகு

பாக்கித்தானின் பாரம்பரிய இசை தெற்காசியாவின் பாரம்பரிய இசையை அடிப்படையாகக் கொண்டது. இது பிராந்தியத்தை ஆட்சி செய்த பல்வேறு சாம்ராஜ்யங்களால் ஆதரிக்கப்பட்டு பாரம்பரிய மற்றும் இந்துஸ்தானி இசை உட்பட பல வகை பாரம்பரிய இசையைப் பெற்றது. பாக்கித்தானின் பாரம்பரிய இசையில் 'சுர்' (இசைக் குறிப்பு) மற்றும் 'லை' (ரிதம்) ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகள் உள்ளன. இசைக் குறிப்புகளை ஒரு அளவுகோலாக முறையாக அமைப்பது ஒரு இராகம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சுழற்சியின் ஏற்பாடு தாளம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நிகழ்ச்சியின் போது இதன் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

கரானாக்கள்

தொகு

பாரம்பரிய இசையின் கரானாக்களிலிருந்து பல குடும்பங்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து இசையைப் பெற்றன. இன்றும் அதை நிகழ்த்துகின்றன. சில பிரபலமான கரானாக்கள்: குவால் பச்சா கரானா ( உஸ்தாத் நுசுரத் பதே அலி கான் மற்றும் ரஹத் நுசுரத் பதே அலி கான் ஆகியோர் இந்த கரானாவைச் சேர்ந்தவர்கள்), மற்றும் பாட்டியாலா கரானா (சபகத் அமானத் அலிகான் இந்த கரானாவைச் சேர்ந்தவர்). ஒரு முக்கிய சித்தார் கலைஞரும் ஒரு சூபி பாடகருமான உஸ்தாத் குலாம் பரித் நிஜாமி சேனியா கரானாவைச் சேர்ந்தவர் ஆவார். பாக்கித்தானில் பாரம்பரிய இசையை வழங்கும் பிற கரானாக்களின் எண்ணிக்கையும் உள்ளது. உஸ்தாத் பதர் உஸ் ஜமான் போன்ற சில பாரம்பரிய இசைக்கலைஞர்கள் எந்த பிரபலமான கரானாவையும் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் பாரம்பரிய இசையை பெரிதும் வழங்கியுள்ளனர். புகழ்பெற்ற சித்தார் கலைஞர் முகமது ஷெரீப் கான் பூஞ்ச்வாலே சித்தாரின் பூஞ்ச் கரானாவைச் சேர்ந்தவர். உஸ்தாத் ரைஸ் கான் பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய சித்தார் கலைஞர் ஆவார்.

கைம்முரசு இணை

தொகு

சௌகத் உசைன், தாரி கான் மற்றும் தபோ கான் ஆகியோர் பாக்கித்தானில் இருந்து பாரம்பரியமாக கைம்முரசு இணை வாசிப்பதை வெளிப்படுத்தியவர்கள். பாக்கித்தானின் கடைசி மீதமுள்ள பகவாஜ் வீரர்களில் ஒருவரான தலிப் உசைன், பஞ்சாப் கரானா பாணியின் முரசு வகை கருவிகளின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளராக இருந்தார்.

கசல்

தொகு

சொற்பிறப்பு

தொகு

கவிதைகளில், கசல் என்பது ஒரு கவிதை வடிவமாகும், இது ஒரு ரைம் மற்றும் பல்லவியைப் பகிர்ந்து கொள்ளும் இணைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வரியும் ஒரே மீட்டரைப் பகிர்ந்து கொண்டிருக்கும். சொற்பிறப்பியல் ரீதியாக, இந்த வார்த்தை உண்மையில் "ஒரு வனப்புமிக்க சிறுமானின் மரண அழுகை" எனக் குறிக்கிறது. இந்த விலங்கு கிசால் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து கேசெல்ஸ் என்ற ஆங்கில வார்த்தை அல்லது உருது மொழியில் கஸ்தோரி ஹரன் (ஹரன் மானைக் குறிக்கிறது) என வந்திருக்கலாம்.

கசல்கள் பாரம்பரியமாக காதல், பிரிப்பு மற்றும் தனிமையின் வெளிப்பாடுகள் ஆகும். இழப்பு அல்லது காதலனைப் பிரித்தல் மற்றும் அந்த வலியையும் மீறி அன்பின் அழகு ஆகிய இரண்டின் கவிதை வெளிப்பாடாக ஒரு கசல் இருக்கும். பாரம்பரியமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கவிதை வடிவங்களை விட கசலின் கட்டமைப்பு தேவைகள் மிகவும் கடுமையானவை. அதன் பாணியிலும் உள்ளடக்கத்திலும் இது ஒரு வகையாகும், இது காதலர்களிடையே காதல் மற்றும் பிரிவினை என்ற மைய கருப்பொருளைச் சுற்றியுள்ள பல்வேறு வெளிப்பாடுகளை ஆய்வு செய்துள்ளது.

பரஸ்பர அன்பைப் பற்றிய ஒருவரின் உணர்வுகளின் வெளிப்பாடாகவும், அந்த தொகுப்பில் எது வந்தாலும்- அதனுடன் இருக்கும் சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், ஏமாற்றங்கள், பூர்த்தி மற்றும் திருப்தி ஆகியவற்றுடன் கசல்களை பெண்களுக்காக ஆண் கவிஞர்களாலும் ஆண்களுக்காக பெண் கவிஞர்களாலும் எழுதப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் புதிய இஸ்லாமிய சுல்தானகத்தின் அரசவைகள் மற்றும் சூபி சாதுக்க்கள் செல்வாக்கின் கீழ் கசல் தெற்காசியாவில் பரவியது. கசல் மிக முக்கியமாக உருது கவிதைகளின் வடிவமாக இருந்தாலும், இன்று, அது பல மொழிகளின் கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான கசல் பாடகர்கள் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கியால் அல்லது தும்ரி மொழிகளில் பாடுகிறார்கள்

குறிப்புகள்

தொகு
  1. "Ministry of Information, Broadcasting & National Heritage!". Archived from the original on 2015-04-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-23.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகிஸ்தானின்_இசை&oldid=3654425" இலிருந்து மீள்விக்கப்பட்டது