பாகீ

கிரேக்கத்தின் பண்டைய கடற்கரை நகரம்

பாகீ ( Pagae அல்லது Pagai, பண்டைக் கிரேக்கம்Πηγαί ) என்பது அல்சியோனியன் அல்லது கொரிந்து வளைகுடாவில் உள்ள பண்டைய மெகாராவின் நகரமாகும். கிரேக்கத் தொன்மங்களின் சில ஆதாரங்களின்படி, மன்னர் டெரியசின் சொந்த நகரமாக பாகீ இருந்தது. இது மேற்கு கடற்கரையில் உள்ள மெகாரிஸ் துறைமுகம் மற்றும் தலைநகருக்கு அடுத்து நாட்டின் மிக முக்கியமான இடமாகும். இசுட்ராபோவின் கூற்றுப்படி, இது மெகாரிக் பூசந்தியின் மிகக் குறுகிய பகுதியில் அமைந்துள்ளது. பாகீயிலிருந்து நிசீயா வரையிலான தொலைவு 120 ஸ்டேடியா ஆகும்.[1] கி.மு. 455 இல் மெகாரியர்கள் எசுபார்த்தாவிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதென்சின் கூட்டணியில் இணைந்தபோது ஏதெனியர்கள் பாகீயில் தங்கள் கடற்படை தளத்தை நிறுவி பாதுகாப்பை பலப்படுத்தினர். பெலோபொன்னெசீயாவில் இருந்து யாரேனும் ஏதென்சு மீது படையெடுத்து வந்தால், அதற்கு அவர்கள் மெகராவை வழியாக பயன்படுத்தக்கூடாது என்பதே ஏதெனியர்களின் தோக்கமாக இருந்தது. கி.மு. 454 இல் மெகாரா அவர்களிடமிருந்து கிளர்ச்சி செய்த சிறிது காலத்திற்குப் பிறகு ஏதெனியர்கள் பாகீயை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அதே ஆண்டில் செய்யப்பட்ட முப்பது ஆண்டு போர்நிறுத்தத்தின் மூலம், அவர்கள் இந்த இடத்தை மெகாரியர்களிடம் ஒப்படைத்தனர்.[2]

இந்த இடம் நவீன அலெபோச்சோரிக்கு அருகில் அமைந்துள்ளது.[3][4] இந்த நகரச் சுவர்களின் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகீ&oldid=3406536" இலிருந்து மீள்விக்கப்பட்டது