பாக்கித்தான் உச்ச நீதிமன்ற கட்டடம்
பாக்கித்தான் உச்ச நீதிமன்ற கட்டடம் (Supreme Court of Pakistan Building) பாக்கித்தான் நாட்டு நீதித்துறையின் முக்கிய கட்டடமாகும். பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்து நகரத்தின் 44000 அரசியலமைப்பு அவென்யூ என்ற முகவரியில் அமைந்துள்ளது.[1] 1993 ஆம் ஆண்டு இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தெற்கில் பிரதமர் அலுவலகம் மற்றும் வடக்கே சனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்ற மாளிகை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
பாக்கித்தான் உச்ச நீதிமன்ற கட்டடம் Supreme Court Building | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | நியோகிளாசிக்கல் கட்டிடக்கலை, நவீன கட்டிடக்கலை |
இடம் | 44000 பாக்கித்தான், இசுலாமாபாத்து, அரசியலமைப்பு அவென்யூ |
ஆள்கூற்று | 33°43′33″N 73°06′01″E / 33.7257°N 73.1002°E |
கட்டுமான ஆரம்பம் | 1960s |
நிறைவுற்றது | 1993 |
செலவு | ரூ. 170 மில்லியன் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கென்சோ தாங்கே |
பொறியாளர் | தலைநகர மேம்பாட்டு ஆணையம், இசுலாமபாத்து பாக்கித்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் சிமென்சு பொறியியல் நிறுவனம். |
பிரபலமான சப்பானிய கட்டட வடிவமைப்பாளர் கென்சோ தாங்கே வின் [2] ஆலோசனையுடன் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர மேம்பாட்டு ஆணையமும் சிமன்சு பொறியியல் நிறுவனமும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டன.[3] முக்கியமான அரசாங்க கட்டிடங்களின் கட்டிடக்கலையில் நவீனத்துவத்தை இணைப்பதற்கான பாக்கித்தான் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கட்டிடம் இருந்தது. இதற்காக பல உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். தாங்கே, முதலில் அழைப்பை நிராகரித்த பிறகு, இறுதியில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்.[2]
புகைப்பட காட்சியகம்
தொகு-
உச்ச நீதிமன்ற கட்டிடம் (மேற்கு மூலை)
-
உச்ச நீதிமன்ற கட்டிடம் (கிழக்கு மூலை)
மேற்கோள்கள்
தொகு- ↑ Google. "The address and location of the Supreme Court of Pakistan". Google. Google map inc. பார்க்கப்பட்ட நாள் 5 January 2014.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ 2.0 2.1 Goran Therborn, Cities of Power: The Urban, The National, The Popular, The Global (2017), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1784785474.
- ↑ Govt. Pakistan. "Supreme Court Building". Govt. Pakistan. Supreme Court of Pakistan press. Archived from the original on 1 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
புற இணைப்புகள்
தொகு- உச்ச நீதிமன்ற கட்டிடம் பரணிடப்பட்டது 2017-02-01 at the வந்தவழி இயந்திரம்