பாக்டசுடு

ஈரான் நகரம்

பாக்டசுடு (Pakdasht, பாரசீக மொழி: پاكدشت‎, பிற பெயர்கள்: Pākdasht, Palasht, Palesht, Palishth, Polasht, and Pol Dasht) என்ற நகரமானது பாக்டசுடு கவுன்டியில் உள்ள நகரமாகும். பாக்டசுடு கவுன்டியின் தலைநகரமாக, இந்நகரம் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 32,625 குடும்பங்கள் இந்நகரத்தில் இருந்தனர். அக்குடும்ப உறுப்பினர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 126,281 நபர்கள் ஆக இருந்தது. தெகுரான் நகரத்தின் தென்கிழக்குத் திசையில் 25 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

பாக்டசுடு
پاكدشت
நகரம்
பாக்டசுடு is located in ஈரான்
பாக்டசுடு
பாக்டசுடு
ஆள்கூறுகள்: 35°28′54″N 51°40′49″E / 35.48167°N 51.68028°E / 35.48167; 51.68028
Country Iran
Provinceதெகுரான் மாகாணம்
Countyபாக்டசுடு மாவட்டம்
BakhshCentral
மக்கள்தொகை (2016 Census)
 • நகர்ப்புறம்236,319 [1]
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)

புவியிடம் தொகு

 
ஈரானின் 31 மாகாணங்கள்
 
தெகுரான் மாவட்டங்கள்

ஆசியக் கண்டத்தின், மேற்குப் பகுதியில்[2][3], பதினெட்டு மத்திய கிழக்கு நாடுகள்[4][5] உள்ள நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, ஈரான் என்ற இசுலாமிய நாடாகும். அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், தெகுரான் மாகாணம் ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 16 கவுன்டிகள்(county) என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மாவட்டங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த பதினாறு மாவட்டங்களில் (தெகுரான், தம்மாவன்டு, இரா, சமிர்நட்டு, வமின், சாரியர், இசுலமசகர், ரோபட் கரிம், பாக்டசுடு, பைரூசுக்கு, கியோட்சு, மலர்டு, பிசுவ, பகரேசுடன், பர்டீசு, குவார்சக்கு) ஒன்றான, பாக்டசுடு (Pakdasht County شهرستان پاكدشت ) கவுன்டி / மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக, இந்த நகரம் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு இந்த நகரமானது, நகராட்சி என்ற நகராண்மை கழக ஆட்சிப் பகுதியாக உயர்ந்தது.

மக்கள் தொகை தொகு

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 91 வது இடத்தினைப் பெறுகிறது.[1] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 236,319 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 206,490 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +14.45% அதிகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 https://www.amar.org.ir/english
  2. ""CESWW" – Definition of Central Eurasia". Cesww.fas.harvard.edu. Archived from the original on 5 August 2010. பார்க்கப்பட்ட நாள் 1 August 2010.
  3. "Iran Guide". National Geographic. 14 June 2013. Archived from the original on 12 December 2009. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.
  4. Beaumont, Blake & Wagstaff 1988, ப. 16.
  5. Koppes, CR (1976). "Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"". Middle East Studies 12: 95–98. doi:10.1080/00263207608700307. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்டசுடு&oldid=2885394" இலிருந்து மீள்விக்கப்பட்டது