பாசிசுவர் சென்

இந்திய விஞ்ஞானி

போஷி சென் (Boshi Sen) என்றும் அழைக்கப்படும் பாசிசுவர் சென் (Basiswar Sen) (1887 - 31 ஆகஸ்ட் 1971) ஓர் இந்திய விஞ்ஞானியும், விவசாயியுமாவார். பசுமைப் புரட்சி இயக்கத்தின் முன்னோடியாக இருந்த இவர், ஏராளமான உணவு தானியங்களை வளர்ப்பதன் மூலம் இந்தியாவின் உணவு நிலப்பரப்பை மாற்றினார். இதனால் நாட்டில் எந்தவொரு பஞ்சமும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போனது. இவரது மனைவி கெர்ட்ரூட் எமர்சன் சென், ஓர் அமெரிக்க எழுத்தாளரும் ஆசியாவின் நிபுணருமான ஆவார். சென், இமயமலையின் அல்மோரா பகுதியில் விவேகானந்த ஆய்வகத்தை நிறுவினார். இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், ஜூலியன் ஹக்ஸ்லி, டி. எச். லாரன்ஸ் போன்ற பல குறிப்பிடத்தக்க நபர்களின் நண்பராக இருந்தார். சென் இராமகிருஷ்ணா ஆணை மற்றும் இராமகிருஷ்ணா இயக்கம், அத்துடன் இந்திய விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திரபோஸ் , சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடருமான சகோதரி நிவேதிதை ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார் . [1] இவருக்கு 1957ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமை கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது [2]

பாசிசுவர் சென்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

 
குந்தன் வீடு, முனைவர் பாசிசுவர் சென் வாழ்ந்த வீடு

சென், 1887 இல் வங்காளத்தின் பிஷ்ணுபூர் பகுதியில் , வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியான இராமேசுவர் சென் என்பவருக்கும் பிரசன்னமயி தேவி என்பவருக்கும் கனாகப் பிறாந்தார். சென்னின் மூத்த சகோதரர் சுரேசுவர் சென் சாரதா தேவியின் தீவிர பக்தர். [3] இவரது தந்தையின் அகால மரணம் காரணமாக, குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்தது. இவர், (அல்லது போஷி தனது பிற்கால வாழ்க்கையில் அறியப்பட்டதால்), ராஞ்சியிலுள்ள தனது சகோதரியுடன் தங்கியிருந்து பள்ளிக் கல்வியை முடித்தார். கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இளம் அறிவியலில் பட்டம் பெற்றார். இராமகிருஷ்ணா ஆணைக்கு இவரது நண்பர் பிபூதி பூஷோன் கோஷ் இவரை அறிமுகப்படுத்தினார். விவேகானந்தரின் நேரடி துறவற சீடரான குப்தா மகாராஜ் என்றும் அழைக்கப்படும் சுவாமி சதானந்தாவுடன் இவர் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். போஷி சாரதா தேவியுடன் சில புகைப்படங்களையும் எடுத்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Boshi Sen—Scientist and Karmayogi, by Hironmoy Mukherjee, Bulletin 2009, Ramakrishna Mission Institute of Culture
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  3. "Sri Sri Matri Mandir::". www.rkmjoyrambati.org. Archived from the original on 24 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.

புத்தகங்கள் தொகு

Nearer Heaven Than Earth: The Life and Times of Boshi Sen and Gertrude Emerson Sen, by Girish N Mehra, ISBN 9788129110923

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிசுவர்_சென்&oldid=3196584" இலிருந்து மீள்விக்கப்பட்டது