பாசுகரராஜபுரம்
பாசுகரராஜபுரம் (Bhaskararajapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் வட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த இடத்தில் சமாதி அடைந்ததாக நம்பப்படும் 18ஆம் நூற்றாண்டின் இந்து துறவி பாஸ்கரராயரின் பெயரால் இது பெயரிடப்பட்டது. மேலும் இது காவிரி ஆறு மற்றும் விக்ரமன் ஆற்றால் அண்டை நகரமான திருவாலங்காட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
பாசுகரராஜபுரம் Bhaskararajapuram | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°03′11″N 79°30′51″E / 11.0529314°N 79.5142937°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
பெயர்ச்சூட்டு | பாஸ்கரராயர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 490 |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
"பாஸ்கரா" என்று உருவாக்கும் எழுத்துக்கள் ஆற்றல் மிக்க பீஜாக்ஷரங்கள், இந்த பெயரைக் கொண்டவர்கள் "அதிர்ஷ்டத்தின் உருவங்கள்"
இங்குள்ள அக்ஷர மாத்ருகா மகா மண்டபம் 2 ஆகத்து 2009 அன்று புஜ்யஸ்ரீ பாஸ்கராச்சாரியார் நினைவு அறக்கட்டளையின் ஆயுள் அறங்காவலரும் தலைவருமான கே. மோகன் குருஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maha mantapam inaugurated". தி இந்து. 28 August 2009 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110060729/http://www.hindu.com/fr/2009/08/28/stories/2009082851050200.htm.