பாசுபரசு பெண்டாபுரோமைடு
பாசுபரசு பெண்டாபுரோமைடு (Phosphorus pentabromide) என்பது PBr5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் அதிக வினைத்திறம் கொண்டதாக உள்ளது. திண்மநிலையில் டெட்ராபுரோமோபாசுப்போனியம் புரோமைடு ([PBr4]+[[Bromide|Br−]) கட்டமைப்பில் காணப்படுகிறது. ஆனால் நீராவி நிலையில் PBr3 மற்றும் Br2 ஆக் முற்றிலும் பிரிக்கப்படுகிறது. இந்நீராவி நிலை விரைவாக 15 கெல்வின் வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டால் பாசுபரசு எழுபுரோமைடு (டெட்ராபுரோமோபாசுப்போனியம் முப்புரோமைடு) அயனி இனங்கள் உருவாகின்றன.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபுரோமோபாசுப்போனியம் புரோமைடு
| |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
7789-69-7 | |
ChemSpider | 56429 |
EC number | 232-186-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62678 |
| |
UNII | 3D9WIS0BQW |
UN number | 2691 |
பண்புகள் | |
PBr5 | |
வாய்ப்பாட்டு எடை | 430.49 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள்[1] |
அடர்த்தி | 3.61 கி/செ.மீ3 |
உருகுநிலை | ca. 100 ° செல்சியசு (சிதையும்) |
கொதிநிலை | 106 °C (223 °F; 379 K) (சிதையும்) |
நீருடன் வினைபுரியும் | |
கரைதிறன் | எத்தனால் கரைசலில் சிதையும் கார்பன் டெட்ராகுளோரைடு, கார்பன் டைசல்பைடு கரைசல்களில் கரையும் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கண் மற்றும் தோலுக்கு எரிச்சலூட்டும் |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கரிம வேதியியலில் கார்பாக்சிலிக் அமிலங்களை அசைல் புரோமைடுகளாக மாற்ற பாசுபரசு பெண்டாபுரோமைடைப் பயன்படுத்தலாம். இது மிகவும் அரிக்கும் தன்மை கொண்டது. தோல் மற்றும் கண்களை கடுமையாக எரிச்சலூட்டுகிறது. பாசுபரசு முப்புரோமைடு மற்றும் புரோமினைக் கொடுக்க இது 100 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தப்பட்டு சிதைக்கப்படுகிறது:[3]
- PBr5 → PBr3 + Br2
Br2 வாயுவுடன் PBr3 சேர்மத்தைச் சேர்ப்பதன் மூலம் PBr5 சேர்மத்தை உருவாக்க இந்த சமநிலையை மாற்றியமைப்பது நடைமுறையில் கடினமாக உள்ளது. ஏனெனில் இந்த தயாரிப்பு பாசுபரசு எழுபுரோமைடு [PBr4]+[Br3]− விளைச்சலுக்கு மேலும் கூடுதலுக்கு ஆளாகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Phosphorus pentabromide".
- ↑ Corbridge, D. E. C. (2013). Phosphorus: Chemistry, Biochemistry and Technology, Sixth Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4088-7.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Popov, A. I.; Skelly, N. E. (1954). "Spectrophotometric Study of Phosphorus Pentabromide in Various Solvents". J. Am. Chem. Soc. 76 (15): 3916–3919. doi:10.1021/ja01644a014.