பாசு-தெர்
பாசு-தெர் (Basse-Terre, /bæsˈtɛər/, bæss-TAIR; பிரெஞ்சு மொழி: [bɑstɛʁ]) என்பது சிறிய அண்டிலீசில் உள்ள குவாதலூப்பு தீவின் தலைநகரமும், அத்தீவின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். குவாதலூப்பு பிரான்சின் ஆட்சிக்கு உட்பட்டது.[1] இந்நகரம் குவாதலூப்பின் மேற்கு அரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நகர்ப்புறப் பகுதியுடன் சேர்ந்து 2012 இல் 44,864 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது (இவர்களில் 11,534 பேர் பாசு-தெர் நகரில் வாழ்ந்தனர்). இங்கு கால்பந்தாட்டம் பிரபலமான விளையாட்டு ஆகும். வடகிழக்கு மற்றும் வடமேற்கில் சில வேளாண்மை நிலங்களுடன் இந்நகரம் பெரும்பாலும் நகர்ப்புறமாக உள்ளது.[2][3]
பாசு-தெர் Basse-Terre | |
---|---|
நகரம் | |
மேலே: பாசு-தெர் நகரம்; நடுவில்: குவாதலூப் பேராலயம், பாசு-தெர் நினைவகம்; கீழே: தெல்கிரெசு துறைமுகம், நகர மண்டபம் | |
குவாதலூப்பில் அமைவிடம் (சிவப்பில்) | |
ஆள்கூறுகள்: 15°59′45″N 61°43′45″W / 15.9958°N 61.7292°W | |
நாடு | பிரான்சு |
பெருநகரம் | பாசு-தெர் |
மண்டலம் | பாசு-தெர் |
Area 1 | 5.78 km2 (2.23 sq mi) |
மக்கள்தொகை (சன. 2020) | 9,892 |
• அடர்த்தி | 1,700/km2 (4,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 97100 |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
மக்கள்
தொகு2017 இல் நகரில் 10,058 மக்கள் இருந்தனர். 2017 இல் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 4,732 ஆகும்.[4] 2007 முதல் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1954 | 11,837 | — |
1961 | 13,978 | +2.40% |
1967 | 15,690 | +1.94% |
1974 | 15,457 | −0.21% |
1982 | 13,656 | −1.54% |
1990 | 14,003 | +0.31% |
1999 | 12,410 | −1.33% |
2007 | 12,451 | +0.04% |
2012 | 11,534 | −1.52% |
2017 | 10,058 | −2.70% |
ஆதாரம்: INSEE[5] |
காலநிலை
தொகுபாசு-தெர் ஒரு வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலைக்கும், ஒரு வெப்பமண்டல பருவமழைக் காலநிலைக்கும் இடையே ஒரு இடைநிலை புள்ளியில் உள்ளது. இந்த இரண்டு காலநிலை வகைகளைக் கொண்ட நகரங்களில் வழக்கமாக இருப்பது போல், இந்நகரம் ஆண்டு முழுவதும் ஒப்பீட்டளவில் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பாசு-தெர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 31 (88) |
32 (90) |
31 (88) |
32 (90) |
33 (91) |
33 (91) |
37 (99) |
38 (100) |
33 (91) |
33 (91) |
32 (90) |
32 (90) |
38 (100) |
உயர் சராசரி °C (°F) | 28 (82) |
28 (82) |
28 (82) |
29 (84) |
30 (86) |
31 (88) |
31 (88) |
31 (88) |
31 (88) |
30 (86) |
29 (84) |
28 (82) |
30 (86) |
தினசரி சராசரி °C (°F) | 24 (75) |
24 (75) |
25 (77) |
26 (79) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
26 (79) |
25 (77) |
26 (79) |
தாழ் சராசரி °C (°F) | 20 (68) |
20 (68) |
21 (70) |
22 (72) |
23 (73) |
24 (75) |
24 (75) |
23 (73) |
23 (73) |
23 (73) |
22 (72) |
21 (70) |
22 (72) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 15 (59) |
16 (61) |
15 (59) |
16 (61) |
17 (63) |
20 (68) |
20 (68) |
20 (68) |
18 (64) |
20 (68) |
17 (63) |
15 (59) |
15 (59) |
பொழிவு mm (inches) | 80 (3.15) |
60 (2.36) |
70 (2.76) |
110 (4.33) |
150 (5.91) |
120 (4.72) |
160 (6.3) |
190 (7.48) |
230 (9.06) |
220 (8.66) |
220 (8.66) |
140 (5.51) |
1,750 (68.9) |
ஆதாரம்: Weatherbase[6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Commune de Basse-Terre (97105), INSEE
- ↑ Basse-Terre on Google Maps
- ↑ Basse-Terre on the Géoportail from National Geographic Institute (IGN) website
- ↑ Dossier complet: Commune de Basse-Terre (97105), INSEE
- ↑ Historique des populations communales, INSEE
- ↑ "Weatherbase: Historical Weather for Basse-Terre".
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பாஸ்-தெர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.