பாடியனூர் தேவி கோயில்
பாடியனூர் சாமுண்டி தேவி கோயில் அல்லது பாடியனூர் தேவி கோயில் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் சாமுண்டி தேவிக்காக உள்ள ஒரு இந்து கோயிலாகும் . இந்த பழமையான கோவில், பூவாச்சலில், திருவனந்தபுரம் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சாமுண்டியின் அவதாரமான பாடியனூரம்மாவின் சிலை உள்ளது.
மூலவர் சன்னதி
தொகுசாமுண்டி தேவியே காளியின் உக்கிர வடிவமாகக் கருதப்படுகிறார். அவர் மூலவராக உள்ளார். இங்கு யக்ஷியம்மா, கணபதி, தம்புரான், யோகேஸ்வரா, நாகர் மற்றும் பிரம்மராட்சஸ் போன்ற துணைத்தெய்வங்கள் உள்ளன. [1]
திருவிழாக்கள்
தொகுஆண்டுதோறும் மீனமாதத்தில் 3 நாட்கள் மகம் தோழல் விழா, கார்த்திகை, மண்டல விருதம், பூசை வாய்பு, ஆயில்ய பூசை, ஐஸ்வர்ய பூசை, விஷூக்கனி உள்ளிட்ட திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.