பாட்னா பல் மருத்துவக் கல்லூரி

பாட்னா பல் மருத்துவக் கல்லூரி (Patna Dental College) பல் மருத்துவத்திற்கான ஒரு நிறுவனம் ஆகும். இது இந்தியாவில் பீகார் மாநிலத்தில், பாட்னா நகரில், பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனமாகும்.[1]

பாட்னா பல் மருத்துவக் கல்லூரி
சுகாதாரம், மருத்துவக் கல்வி
பீகார் அரசு
அமைவிடம் அசோக் ராஜ்பாத், பாட்னா, பீகார், இந்தியா
ஆள்கூறுகள் 25°36′28.77″N 85°10′03.06″E / 25.6079917°N 85.1675167°E / 25.6079917; 85.1675167
மருத்துவப்பணி பொது
வகை பொது, கல்வி
இணைப்புப் பல்கலைக்கழகம் பாட்னா பல்கலைக்கழகம்
அவசரப் பிரிவு ஆம்
நிறுவல் 1960; 64 ஆண்டுகளுக்கு முன்னர் (1960)
வலைத்தளம் Official பாட்னா பல் மருத்துவக் கல்லூரி
பட்டியல்கள் Hospitals in India
வேறு இணைப்புகள் https://en.wikipedia.org/wiki/Patna_Dental_College

வரலாறு

தொகு

பாட்னா பல் மருத்துவக் கல்லூரி பீகார் அரசால், மருத்துவர் ஆர். பி. லால் முயற்சியால், செப்டம்பர் 9, 1960 அன்று, பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டது.

இடம்

தொகு

தற்போது இந்தக் கல்லூரி, பாட்னா நகரின் மையப்பகுதியில், அசோக் ராஜ்பாத்தில் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகில், கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

துறைகள்

தொகு
  • வாய்வழி, மருத்துவம் & பல் கதிரியக்கவியல்
  • புரோஸ்டோடோன்டிக்சு
  • பாதுகாப்பு பல் மருத்துவம் & பல் உள் மருத்துவம்
  • ஆர்த்தடான்டிக்ஸ்
  • பல்புறத்திசு மருத்துவம்
  • குழந்தை பல் மருத்துவம்
  • வாய்வழி நோயியல்
  • வாய்வழி அறுவை சிகிச்சை
  • சமூக பல் மருத்துவம்

படிப்புகள்

தொகு
  • இளநிலை பல் அறுவை சிகிச்சை (BDS)
  • முதுநிலை பல் அறுவை சிகிச்சை (MDS)

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of Patna University". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.