பாணினி (Pāṇini) என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார். இவர் வாழ்ந்த காலம் பற்றியோ இவரது வாழ்க்கை பற்றியோ எவ்வித சான்றுகளும் கிடையாது. இவரது காலம் கிமு நான்காம் நூற்றாண்டாக அல்லது ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுவது வெறும் உய்த்துணர்வின் அடிப்படையிலேயாம். இவர் சிந்து நதிக் கரையில், இன்றைய பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் சலத்துலா என்னும் இடத்தில் பிறந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். [சான்று தேவை]

சமசுக்கிருத இலக்கணத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம் மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணினி&oldid=2619813" இருந்து மீள்விக்கப்பட்டது