பானி யாதவ் (Bani Yadav பிறப்பு 7 செப்டம்பர் 1971) ஓர் இந்திய பேரணி ஓட்டுநர், இயக்கூர்தி விளையாட்டு விளம்பரதாரர் மற்றும் சமூக உரிமை ஆதரவாளர் ஆவார்.[1][2] 2019 மற்றும் 2018 க்கான தேசிய சாலை குறுக்கு ஓட்ட பெண்கள் பிரிவில் வாகையாளராக வெற்றி பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற பெண் பிரிவில் பெரும்பாலான முக்கிய சாலை குறுக்கு ஓட்டப் பேரணி பட்டங்களை வென்ற ஒரே பெண் ஆவார். ஐஆர்சி - ரலி டி நார்த் - 2016 இல் ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தைப் பிடித்த முதல் பெண் எனும் பெருமை பெற்றார். 2016 ஆம் ஆண்டுக்கான பேரணிக்கு FMSCI - மோட்டார்ஸ் போர்ட்ஸில் சிறந்த பெண் விருது பெற்ற முதல் பெண் ஆவார். அபுதாபியில் உள்ள யாசு மெரினா பாதையில் ஃபார்முலா 4 மகிழுந்துவை ஓட்டிய முதல் இந்திய பெண் ஆவார். இந்தியாவின் 69 வது குடியரசு தினத்தன்று அரியானா மாநில அரசால் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது. அவளுக்கு சிஐஐ - ஐடபிள்யூஎன் மூலம் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

இவர் லக்னோவில் பிறந்து பின்னர் தில்லியில் வளர்ந்தார். அவர் தவுலா குவானின் ராணுவ பொதுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தில் புவியியலில் இளங்கலைப் பட்டமும், விளம்பரம் மற்றும் பொது உறவுகளில் பட்டயமும் பெற்றார். அவர் தனது 13 வது வயதில் வண்டிகளைஓட்டுவதில் தனது முதல் அனுபவத்தைப் பெற்றார், மேலும் அவர் பந்தயத்தில் ஒரு தொழில் முறை ரீதியில் கலந்து கொள்வது என முடிவு செய்தார். அவரது வாழ்க்கையில் பல வீழ்ச்சிகள் இருந்தபோதிலும் அவர் தன் கனவுகளை கைவிடவில்லை. 43 வயதில், ஜெய்ப்பூர் விரைவு ஓட்டத்தில் முதன்முறையாக 2013 இல் அவர் தனது பந்தய வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் பேரணியில் 2 வது இடத்தினைப் பிடித்தார்.

பானி தேசிய சாலை குறுக்கு ஓட்ட வாகையாளர் -பெண் மற்றும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் 2018 மற்றும் 2019 வாகையாளராக ஆகிய பெண் எனும் பெருமை பெற்றார். அபுதாபி யாசு மெரினா சுறுப் பாதையில் சர்வதேச அளவில் ஃபார்முலா 4 மகிழுந்துகளை அதிகாரப்பூர்வமாக இயக்கிய முதல் பெண் இவர் ஆவார். இந்தியாவில் இயக்கூர்தி விளையாட்டில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே பெண் இவர் ஆவார்.

2013 ஆம் ஆண்டில் இயக்கூர்திப் பந்தயத்தில் பானி நுழைந்தார் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் பல தடகள நிகழ்வுகள் மற்றும் குறுக்கு ஓட்ட பேரணிகளில் வாகையாளராக உள்ளார் மற்றும் இந்தியாவில் மட்டுமே முக்கிய குறுக்கு ஓட்ட பேரணி பட்டங்களை வென்றுள்ளார். அவர் குறுக்கு ஓட்ட பேரணி, சாலை குறுக்கு ஓட்டம் எக்ஸ்ட்ரீம் பேரணிகள், நேர வேக தூர நிகழ்வுகள், ஐஎன்ஆர்சி மற்றும் ஐஆர்சி பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான பேரணிகளில் கலந்து கொண்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் ஐஆர்சி ஆசியா கோப்பையில் வேகமான பெண் ஓட்டுநராக அறிவிக்கப்பட்டார். [3]பெண் அதிகாரமளித்தல் நிகழ்வுகளில் பானி தீவிரமாக பங்கேற்கிறார், அவர் சம உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை தீவிரமாக ஆதரிப்பவர். அவர் விலங்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமையை மையமாகக் கொண்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர் மற்றும் அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

குடும்ப பின்னணி

தொகு

அவர் தனது பள்ளி நண்பர் சுரேஷை திருமணம் செய்து கொண்டார் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்களும் வேகப் பந்தய வீரர்கள் ஆவர்.[4]

சான்றுகள்

தொகு
  1. Ghosh, Anirvan. "Speed Racer Bani Yadav: I love my Red-Devil - Jaipur Women Blog - Stories of Indian Women". Jaipur Women Blog. Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  2. Rebecca, Merin (2015-08-12). "Bani, the lady of the wheel". English.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  3. Das, Deepannita (2018-11-13). "India's Fastest Woman Rally Driver Knows How To Put Her Life on the Right Track". LifeBeyondNumbers (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
  4. 15 Jul, Abhimanyu Mathur / TNN / Updated; 2017; Ist, 18:14. "Dakshin Dare: Gurgaon-based racer Bani Yadav and son become first mother-son team to participate in Dakshin Dare rally | Gurgaon News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-10. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணி_யாதவ்&oldid=3289751" இலிருந்து மீள்விக்கப்பட்டது