பாதரச(I) அயோடைடு
பாதரச(I) அயோடைடு (Mercury(I) iodide) என்பது Hg2I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஓளியில் படநேர்ந்தால் பாதரச(I) அயோடைடு சிதைவடைந்து பாதரச டை அயோடைடாக (HgI2) மாறுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாதரச(I) அயோடைடு
| |
வேறு பெயர்கள்
மெர்க்குரசு அயோடைடு
சிவப்பு பாதரசம் | |
இனங்காட்டிகள் | |
15385-57-6 | |
ChemSpider | 21160367 |
EC number | 239-409-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 27243 |
| |
UN number | 1638 |
பண்புகள் | |
Hg 2I 2 | |
வாய்ப்பாட்டு எடை | 654.99 கி மோல்−1 |
தோற்றம் | அடர் மஞ்சள், ஒளிபுகா படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 7.7 கி மில்லி−1 |
−41.5•10−6 செ.மீ3/மோல் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−119.09 கியூ மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
241.47 யூ கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H310, H330, H373, H410 | |
P260, P273, P280, P284, P301+310 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபாதரசம் மற்றும் அயோடின் சேர்மங்கள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டு பாதரச(I) அயோடைடு உருவாகிறது.
கட்டமைப்பு
தொகுநேர்கோட்டு X-Hg-Hg-X அலகுகளை பொதுவாகக் கொண்டிருக்கும் மற்ற பாதரச(I) சேர்மங்களைப் போல Hg2I2 சேர்மமும் 272 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-Hg பிணைப்பும் (பாதரசம் உலோகத்தில் Hg-Hg பிணைப்பு நீளம் 300 பைக்கோமீட்டர் ஆகும்) 268[1] பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-I பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு IHg2I அலகுகளைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு பாதரச அணுவும் எண்கோண வடிவத்தில் உள்ளன. அருகிலுள்ள இரண்டு அயோடின் அணுக்களுடன் மேலும் 351 பைக்கோமீட்டர் நீளத்துடன் கூடுதலாக நான்கு புளோரின் அணுக்கள் காணப்படுகின்றன. உண்மையில் இது மூலக்கூற்று சேர்மம் என்றாலும் Hg22+ 2I− என்று முறைப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6