பாதரச(II) ஐதராக்சைடு

பாதரச(II) ஐதராக்சைடு (Mercury(II) hydroxide) என்பது Hg(OH)2 அல்லது HgH2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மெர்க்குரி டையைதராக்சைடு அல்லது பாதரச டையைதராக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள்.

பாதரச(II) ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெர்க்குரி டையைதராக்சைடு
இனங்காட்டிகள்
ChemSpider 14227333
InChI
  • InChI=1S/Hg.2H2O/h;2*1H2/q+2;;/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12989292
  • [Hg+2].[OH-].[OH-]
பண்புகள்
H2HgO2
வாய்ப்பாட்டு எடை 234.605
−100.00•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு முறை

தொகு

பாதரச அயனியுடன் (Hg2+) ஐதராக்சைடு அயனியை (OH− ) சேர்ப்பதால் இவ்வினையில் பாதரச(II) ஐதராக்சைடு சிறிது நேரத்தில் உற்பத்தி ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும்[1], நீரிய கரைசலில் இவ்வாறு பாதரச(II) ஐதராக்சைடு தயாரிக்க சாத்தியம் இல்லை. ஏனெனில் இவ்வினையில் பாதரச ஆக்சைடு மஞ்சள் நிறத்தில் வீழ்படிவாக உருவாகிறது. 2004 ஆம் ஆண்டில் வாங் மற்றும் ஆண்ட்ரூசு ஆகியோர் முதன்முதலில் இம்மூலக்கூறு இருப்பதற்கான சோதனை ஆதாரங்களை அறிவித்தனர்[1]. பாதரசம், ஆக்சிசன், ஐதரசன் ஆகியனவற்றின் உறைகலவையை பாதரச வில் விளக்கின் மூலம் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி பாதரச(II) ஐதராக்சைடை உற்பத்தி செய்தார்கள்[1].

50 ° செல்சியசு வெப்பநிலையில் பாதரச அணுக்களை ஆவியாக்கி அவற்றை நியான், ஆர்கான் அல்லது டியூட்ரியம் வாயுக்கள் கலந்த வாயுவில் செலுத்தி உடன் 2 முதல் 8% ஐதரசன் மற்றும் 0.2 முதல் 2.0% ஆக்சிசன் சேர்த்து அந்த உறை கலவை தயாரிக்கப்பட்டது. பின்னர் இக்கலவையை 5 கெல்வின் வெப்பநிலைக்கு ஒடுக்கி சீசியம் அயோடைடு சன்னலில் கதிரியக்கத்திற்கு உட்படுத்தினர்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Xuefeng Wang; Lester Andrews (November 18, 2004). "Infrared Spectrum of Hg(OH)2 in Solid Neon and Argon". Inorganic Chemistry 44 (1): 108–11. doi:10.1021/ic048673w. http://pubs.acs.org/doi/pdfplus/10.1021/ic048673w. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச(II)_ஐதராக்சைடு&oldid=4126981" இலிருந்து மீள்விக்கப்பட்டது