பானு பிரதாப் சிங் வர்மா

இந்திய அரசியல்வாதி

பானு பிரதாப் சிங் வர்மா (Bhanu Pratap Singh Verma) (பிறப்பு: சூலை 15, 1957) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சரும் ஆவார் . இவர் 1996 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்று தற்போது ஜலான் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரபிரதேசத்தின் கோரி சமூகத்தைச் சேர்ந்தவர். [1]

பானு பிரதாப் சிங் வர்மா
இணை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்பிரதாப் சந்திர சாரங்கி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்கன்சியாம் அனுராகி
தொகுதிஜலான் மக்களைத் தொகுதி
பதவியில்
1996–1999
முன்னையவர்கயா பிரசாத் கோரி
தொகுதிஜலான்
தொகுதிஜலான்
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1993–1996
பின்னவர்சைன் சுக் பாரதி
தொகுதிகோஞ்ச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூலை 1957 (1957-07-15) (அகவை 66)
கோஞ்ச் மாவட்டம், ஜலான், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
இராம்மூர்த்தி வர்மா (தி. 1972)
பிள்ளைகள்5 மகன்கள்
பெற்றோர்s
  • சுமர் வர்மா (father)
  • சுமித்ரா வர்மா (mother)
வாழிடம்(s)மால்வியா நகர், கோஞ்ச் மாவட்டம். ஜலான்
கல்விமுதுகலை]], இளங்கலைச் சட்டம்
தொழில்வழக்கறிஞர், உழவர்]], சமூகப்பணி
Source [1]

1996, 1998, 2004, 2014, 2019 பொதுத் தேர்தல்களில் ஜலான் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.[2] [3]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் தொகு

பானு பிரதாப் சிங், உத்தரபிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான கோஞ்சில் சுமர் வர்மா மற்றும் சுமித்ரா வர்மா தம்பதியின் மகளாகப் பிறந்தார். பானு பிரதாப் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டப் படிப்பை முடித்துள்ளார். பிப்ரவரி 17, 1972 இல் இராம் மூர்த்தி வர்மா என்பவரை மணந்தார். தற்போது உத்தரபிரதேச மாநிலம் கோஞ்சில் வசித்து வருகிறார்.

சான்றுகள் தொகு

  1. Rashid, Omar (2021-07-07). "Cabinet reshuffle | Inductions from U.P. reflect BJP’s focus on caste equations ahead of 2022 polls" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/cabinet-reshuffle-inductions-from-up-reflect-bjps-focus-on-caste-equations-ahead-of-2022-polls/article35201182.ece. 
  2. "Jalaun Lok Sabha Election Results 2019: जालौन लोक सभा चुनाव 2019 उम्‍मीदवार के नाम, पिछले विजेता– NDTV India". khabar.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-17.
  3. "Jalaun Lok Sabha Election Results 2019 Live: Jalaun Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-17.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானு_பிரதாப்_சிங்_வர்மா&oldid=3723909" இலிருந்து மீள்விக்கப்பட்டது