பான்டேனசு
கிரேக்க கிறிஸ்தவ இறையியலாளர்
தத்துவஞானி புனித பான்டேனசு (கிரேக்கம்: Πάνταινος; இறப்பு சுமார் பொ.ஊ. 200) ஒரு கிரேக்க இறையியலாளர் ஆவார். பொ.ஊ. 180-இல் இருந்து அலெக்சாந்திரியாவின் கேடெக்டிகல் கிறித்தவக் கல்விக்கூடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நபராக இருந்தார். இந்தக் கல்விக்கூடம் கேடெக்டிகல் கிறித்தவப் பள்ளிகளில் மிகவும் பழையது. செல்வாக்கு பெற்ற இக்கல்விக்கூடமானது கிறித்தவ இறையியலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது.
தத்துவஞானி புனித பான்டேனசு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மதபோதகர் | |||||||||||||
பிறப்பு | பொ.ஊ. 2-ம் நூற்றாண்டு சிசிலி | ||||||||||||
இறப்பு | சு. பொ.ஊ. 200 அலெக்சாந்திரியா, எகிப்து | ||||||||||||
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை கோப்துக்கள் கிழக்கு மரபுவழி திருச்சபை[1] | ||||||||||||
திருவிழா | ஜூலை 7[2][3] | ||||||||||||
சித்தரிக்கப்படும் வகை | பிரசங்க மேடையிலிருந்து விரிவுரை நல்குதல்
மெய்யியல் பணி
|