முதன்மை பட்டியைத் திறக்கவும்

பாபி ஃபிஷர்

பாபி ஃபிஷர் (Robert James "Bobby" Fischer, மார்ச் 9, 1943ஜனவரி 17, 2008) [1][2]அமெரிக்காவில் பிறந்த சதுரங்க மேதை ஆவார். இவர் இறக்கும்போது ஐஸ்லாந்தின் குடிமகனாக இருந்தார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவராவார். 1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.

பாபி ஃபிஷர்
Bobby Fischer 1960 in Leipzig.jpg
முழுப் பெயர்ராபர்ட் ஜேம்ஸ் ஃபிஷர்
நாடுஅகூநா, ஐஸ்லாந்து
தலைப்புகிராண்ட்மாஸ்டர்
உலக சாம்பியன்1972-1975 (FIDE)
எலோ தரவுகோள்2785 (ஜூலை 1972)

1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார்[3][4]. இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார்[5]. இவரது தாயார் ஒரு யூதர் ஆவார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு


முன்னர்
போரிஸ் ஸ்பாஸ்கி
உலக சதுரங்க வீரர்
1972–1975
பின்னர்
அனத்தோலி கார்ப்பொவ்
முன்னர்
ஆர்தர் பிஸ்கையர்
ஐக்கிய அமெரிக்க சதுரங்க வீரர்
1958–1960
பின்னர்
லாரி எவன்ஸ்
முன்னர்
லாரி எவன்ஸ்
ஐக்கிய அமெரிக்க சதுரங்க வீரர்
1962–1966
பின்னர்
லாரி எவன்ஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபி_ஃபிஷர்&oldid=2802605" இருந்து மீள்விக்கப்பட்டது